பேரணாம்பட்டு தாலுக்கா மேல்பட்டியில் மணல் கடத்தலை தடுக்கச் சென்ற பெண் அதிகாரியை கொலை செய்ய முயற்சி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா ?
பேரணாம்பட்டு தாலுக்கா மேல்பட்டி உள்வட்ட வருவாய் ஆய்வாளராக இருப்பவர் சரஸ்வதி இவர் மற்ற அதிகாரிகளை போல லஞ்சம் வாங்கிக் கொண்டு மணல் கடத்தலுக்கு துணைப் போவதில்லை கடந்த சில தினங்களுக்கு முன்பு M.V குப்பத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் இரவு 12:30 மணி அளவில் மணல் கடத்திக் கொண்டு இருப்பதாக வருவாய் ஆய்வாளர் சரஸ்வதிரகசிய தகவல் கிடைத்தது இதையெடுத்து வருவாய் ஆய்வாளர் சரஸ்வதி தான் ஒரு பெண் என்று நினைக்காமல் இரவு 12:30 மணி என்று நினைக்காமல் துணிச்சலாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளார்.
சம்பவ இடத்தில் மணல் கடத்திக் கொண்டு இருந்த ரமேஷ் அவரது குடும்பத்தினரும் வருவாய் ஆய்வாளர் சரஸ்வதியை கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். இதனால் தப்பித்தோம், பிழைத்தோம் என்று தப்பியோடி வந்த வருவாய் ஆய்வாளர் சரஸ்வதி இது குறித்து மேல்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் ஆனால் மேல்பட்டி காவல் நிலையத்தைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் குப்பன் மற்றும் உள்ள போலீசர்கள் ரமேஷ் தங்களுக்கு மாமுல் வழங்கிக் கொண்டு இருந்தார்.
என்ற ஒரே காரணத்திற்காக புகார் கொடுத்து பல நாட்கள் ஆகியும் இதுவரை ரமேஷ்யையும் அவரது குடும்பத்தாரையும் கைது செய்யாமல் மெத்தனமாக செயல்பட்டு கொண்டு இருக்கின்றனர்.
எனவே இது குறித்து வேலூர் சரக டி.ஐ.ஜி முத்துசாமி. குடியாத்தம் துணை காவல் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி. பேரணாம்பட்டு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முத்துக்குமார். இது பற்றி நேரில் ஆய்வு செய்து உண்மை எனும் தெரியவரும் பட்சத்தில் மேல்பட்டி காவல் நிலைய போலீசார்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.