BREAKING NEWS

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து நறுவீ மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை.

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து நறுவீ மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை.

வேலூர் நறுவீ மருத்துவமனையில் முதல்வர் காப்பீட்டு திட்டத்திலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பெறலாம் – மருத்துவமனையின் தலைவர் சம்பத் பேட்டி.

 

வேலூர் மாவட்டம் வேலூரில் உள்ள நறுவீ மருத்துவமனையில் பெங்களூரை சேர்ந்த ஸ்மிதா (24) இவருக்கு கல்லீரல் முழுவதுமாக செயல் இழந்துள்ளது இதனை அடுத்து நறுவீ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஸ்மிதாவின் தயார் ராஜாத்தி கல்லீரல் ஒரு பாகத்தை தானம் செய்தார்.

இதனை அடுத்து நறுவீ மருத்துவமனையின் மருத்துவர்கள் பால் ஹென்றி மற்றும் அரவிந்த் நாயர் ,கண்காணிப்பாளர் ஜேக்கப் ஜோஸ் ,மேலாளர் நித்தின் சம்பத் அடங்கிய மருத்துவ குழுவினர் சுமார் 9 மணி நேரம் அறுவை சிகிச்சைக்கு பின்னர் ஸ்மிதாவும் கல்லீரலை தானம் செய்த அவரின் தாயார் ராஜாத்தியும் நலமுடன் உள்ளனர்.

இதே போல் வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த ரவீந்திரன் (63) என்பவருக்கு கல்லீரல் முழுவதுமாக செயலிழந்து மாற்றும் நிலை ஏற்பட்டது இதனை அடுத்து அவரின்மனைவி சாந்தி கல்லீரல் தானம் செய்ய முன் வந்ததை அடுத்து கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது ஒரே வாரத்தில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஸ்மிதா என்பவருக்கும் ரவீந்திரன் என்பவருக்கு செய்யப்பட்டு இருவரும் நலமுடன் உள்ளனர்.

இது குறித்து நறுவீ மருத்துவமனையின் தலைவர் சம்பத் செய்தியாளர்களிடம் கூறுகையில் ஒரே வாரத்தில் ஸ்மிதா என்ற இளம் பெண்ணுக்கும் ரவீந்திரன் ஆகிய இருவருக்கும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து இருவரும் நலமுடன் உள்ளனர் இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் முதல்வர் காப்பீட்டு திட்டத்திலும் வருகிறது.

 

கல்லீரல் அறுவை சிகிச்சைக்கு ஒருவருக்கு ரூ.18 லட்சம் வரையில் செலவாகும் நாங்கள் மருத்துவமனை மூலம் நோயாளிகள் கட்டண தொகையை குறைத்து அறுவை சிகிச்சையை செய்கிறோம் மேலும் அதிக அளவில் வெளிமாநில நோயாளிகளும் வெளிநாடுகளை சேர்ந்த நோயாளிகளும் சிகிச்சைக்கு வருகின்றனர் என்று கூறினார்.

CATEGORIES
TAGS