BREAKING NEWS

திமுக என்றைக்கும் இஸ்லாமிய மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் காட்பாடியில் இஸ்லாமிய மக்களுக்கு ரம்ஜான் கொண்டாட அரிசி நெய் எண்ணெய் மற்றும் ரூ.200 பணம் ஆகியவைகள் 3 ஆயிரம் பேருக்கு வழங்கி எம்.பி கதிர் ஆனந்த் பேச்சு.

 

வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் திமுக பகுதி செயலாளர் வன்னியராஜா தலைமையில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் தனது சொந்த பணத்தில் இஸ்லாமிய மக்கள் ரம்ஜான் பொருட்கள் தொகுப்பான அரிசி எண்ணெய், நெய் உள்ளிட்டவைகள் அடங்கிய வைகளும் மற்றும் ரூ.200 ரொக்கப்பணம் ஆகியவைகளும் 3 ஆயிரம் இஸ்லாமிய நபர்களுக்கு வழங்கினார்.

 

 

இவ்விழாவில் வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார், 1-வது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னிய ராஜா மாமன்ற உறுப்பினர்கள் அன்பு, சீனிவாசன், டீட்டா சரவணன், ஒன்றிய செயலாளர்கள் சரவணன் தணிகாசலம் கருணாகரன் பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் கமல்ராஜ் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் எம்பி கதிர் ஆனந்த் பேசுகையில் திராவிட முன்னேற்ற கழகம் எப்போது இஸ்லாமியர்களுக்காகவும் அவர்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்து துணை நிற்கும் இயக்கம் திமுக தான் அதனால் தான் ரம்ஜானுக்காக பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் கறி வாங்க ரூ.200 பணம் வழங்குகிறோம் என்று பேசினார்.

CATEGORIES
TAGS