ராணிப்பேட்டையில் காலை சிற்றுண்டி திட்டம் மையப் பொறுப்பாளர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தில் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் மையப் பொறுப்பாளர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. இந்த பயிற்சி முகாம் தொடர்ந்து 25 ந்தேதி வரை நடைபெறுகிறது.. இந்த நிகழ்ச்சிக்கு வாழ்வாதார இயக்க உதவி திட்ட அலுவலர் அன்பரசு தலைமை தாங்கினார்.
வட்டார மேலாளர் அலமேலு வரவேற்றார். ஒன்றிய குழு தலைவர் கலைக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனசேகரன், சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சோளிங்கர் எம்எல்ஏ ஏ.எம். முனிரத்தினம் கலந்து கொண்டு பயிற்சி முகாமை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து பேசினார்.. ஒன்றியத்திற்கு உட்பட்ட 98 தொடக்க பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தில் ரவா,கிச்சடி உள்ளிட்ட 13 வகையான உணவுகள் வழங்கும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.
சமையலறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், சுகாதாரமான முறையில் உணவு சுவையாகவும் தயாரித்து வழங்க வேண்டும் என அறிவுருத்தி பேசினார். வட்டார ஒருங்கிணைப்பாளர் கனகா நன்றி கூறினார். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் மாரிமுத்து, ராமன், நதியாமதன்குமார், சாவித்திரி பெருமாள், சசிகலா கார்த்தி, சந்திரன், முனியம்மாள்பிச்சாண்டி,
ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன் , நகராட்சி கவுன்சிலர் கோபால், திமுக மத்திய ஒன்றிய செயலாளர் பூர்ணசந்தர், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பாஞ்சாலை, சத்தியா, உமாதேவி, விஜயா உட்பட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
