சோளிங்கர் நகர அதிமுக சார்பில் எடப்பாடியார் பிறந்த நாள் விழா, சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகர அதிமுக சார்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சோளிங்கர் நகர செயலாளர் ராமு தலைமை தாங்கினார்,
நகர துணை செயலாளர் வாசு வரவேற்றார். சோளிங்கர் கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயன், நகர அவைத்தலைவர் ஞானமூர்த்தி, பொருளாளர் மணிகண்டன், கவுன்சிலர் மணிகண்டன் முன்னிலை வகித்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்எல்ஏ ஜி.சம்பத் கலந்துகொண்டார்.
தொடர்ந்து சோளிங்கர் பஸ் நிலையம் அருகே உள்ள கமல விநாயகர் திருக்கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து அதிமுகவினர் ஊர்வலமாக சென்று பட்டாசுகள் வெடித்து எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ஏ எல் சாமி, நகர துணைச் செயலாளர் ராமகோபி, ஓட்டுனர் அணி செயலாளர் குபேந்திரன், பெங்களூர் ஸ்வீட்ஸ் வேலு, ஐப்பேடு ஏகாம்பரம், மகளிர் அணி விஜயா,
சூரை தேவன், போளிப்பாக்கம் மணி, நரசிம்மன் ஒரு சங்கத் தலைவர் தட்சிணாமூர்த்தி, தொழில் நுட்ப அணி சதீஷ், அன்னக்கிளி, அன்சாமணி,கஜேந்திரன், இளங்கோ. சதீஷ் ஏழுமலை உட்பட வட்டச் செயலாளர்கள் பிற அணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.