BREAKING NEWS

சோளிங்கர் அடுத்த கொடைக்கல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ‘உலக செவிலியர் தினம்’ கொண்டாடப்பட்டது.

சோளிங்கர் அடுத்த கொடைக்கல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ‘உலக செவிலியர் தினம்’ கொண்டாடப்பட்டது.

பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த தினத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 12-ந் தேதி செவிலியர்களை கவுரவிக்கும் வகையிலும், நோயாளிகளுக்கு செவிலியர்கள் செய்யும் சேவைகளை போற்றும் வகையிலும்,..

 

‘உலக செவிலியர் தினம்’ கொண்டாடப்படுகிறது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கொடைக்கல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் தின விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் கோபிநாத் தலைமை தாங்கினார்.


இந்த நிகழ்வில் டாக்டர்கள் மற்றும் பொதுமக்கள் செவிலியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அவர்களின் தன்னலமற்ற சேவையை பாராட்டி கேக் வெட்டி செவிலியர்களுக்கு கேக் மற்றும் இனிப்புகளை வழங்கி செவிலியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இதில் சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS