வரும் 29ஆம் தேதி அன்று கோவில்பட்டியில் விடியா திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்; கடம்பூர் ராஜூ அறிப்பு.
அமைச்சர் செந்தில் பாலாஜி உறவினர் இல்லங்களில் சோதனை நடத்திய வருமான வரி துறை அதிகாரிகள் தாக்கபட்ட சம்பவத்தை பார்க்கும் போது திமுக என்பது வன்முறை கலாச்சார கட்சி என்று நிரூபித்து உள்ளது என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேட்டி…
வரும் 29ஆம் தேதி அன்று கோவில்பட்டியில் விடியா திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக கட்சி நிர்வாகி உடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன், மோகன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவி சத்யா, ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன், அன்புராஜ், வண்டானம் கருப்பசாமி, காந்தி என்ற காமாட்சி, செங்கான், மாவட்ட பொருளாளர் மோசஸ், அவைத்தலைவர் அப்பாசாமி,
நகரச் செயலாளர் விஜய பாண்டியன், நகரத் துணைச் செயலாளர் மாதவராஜ்,நகரப் பொருளாளர் ஆரோக்கியராஜ், நகர மன்ற உறுப்பினர்கள் கவியரசன், செண்பக மூர்த்தி, வள்ளியம்மாள் மாரியப்பன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் செல்வகுமார், அம்மா பேரவை மாவட்ட பொருளாளர் அம்பிகா வேலுமணி, மாணவர் அணி ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன், அம்மா பேரவை நகர செயலாளர் ஆபரம் அய்யாதுரை,
வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ராமர், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சிவபெருமாள், வழக்கறிஞர் அணி சங்கர் கணேஷ், நகர முன்னாள் பொருளாளர் வேல்முருகன், மாவட்ட மாணவர் அணி துணைத் தலைவர் செல்வகுமார், கழுகுமலை நகர இளைஞரணி செயலாளர் கருப்பசாமி,முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி,
மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ்,
மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி, கோமதி, ரமேஷ், கடம்பூர் மாயா துரை, கடம்பூர் விஜி, முருகன், கோபி பழனி குமார், பழனி முருகன், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு செய்தியாளரிடம் கூறுகையில் : தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து உள்ளது. காவல்துறை செயல்படாத காவல்துறையாக உள்ளது. காவல்துறை திறமை உள்ள காவல்துறையா இருந்தாலும் அதை தலைமை வைத்து செயல்படக்கூடிய முதலமைச்சர் கண்டும் காணாமல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிற அளவுக்கு மிகப் படுமோசமாக இருக்கிறது.
அதன் விளைவு தான் இன்றைக்கு தமிழகத்திலே போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கஞ்சா குட்கா பல்வேறு போதைப் பொருட்கள் தாராளமாக பள்ளி மாணவர்களை குறி வைத்து போதை பொருள் விற்பனை நடைபெறுகிறது. அதை தடுப்பதற்கு இந்த அரசு திராணியற்ற அரசாக இருக்கிறது.
5 வயது குழந்தைகள் இருந்து பாலியல் வன்கொடுமைகள் அதிகமாக குறிப்பாக பள்ளியில் அதையும் ஒரு கட்டுப்பாட்டுக்கு கொண்டு வராமல் இந்த அரசு மெத்தனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
இன்றைக்கு போஸ்கோ வழக்குகள் ஒரு பக்கம் இருந்தாலும் கூட 5 வயது குழந்தைகள் இருந்து 80 வயது மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமை செய்யப்படுகின்ற கொடுமையான நிலை கேவலமான நிலையை தமிழகத்தின் நிலவி வருகிறது.
இன்றைக்கு அரசின் கையாளத்தனமா தான் கண்டுகொள்ளாமல் கண்மூடித்தனமாக இருந்த காரணத்தினால் தான் விஷ சாராயத்தின் மூலமாக தான் 22 பேர் உயிர் இழப்புகள் தமிழகத்தில் ஏற்பட்டு வேதனையான சம்பவம் ஒரே நேரத்தில் 22பேர் பலியான விஷ சாராயம் சாவு 40 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தமிழகத்தில் நடைபெற்று இருக்கிறது.
தமிழகத்தில் அறிவிக்கபடாத மின் வெட்டு மக்களை மிகுந்த இன்னலுக்கு ஆளாக்கி வருகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி உறவினர் இல்லங்களில் சோதனை நடத்திய வருமான வரி துறை அதிகாரிகள் தாக்கபட்ட சம்பவத்தை பார்க்கும் போது
திமுக என்பது வன்முறை கலாச்சார கட்சி என்று நிரூபித்து உள்ளது.. இதற்கு தகுந்த பலனை அடைவார்கள். ஒன்று பட்ட அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது..சசிகலாவிற்கு இது எல்லாம் தெரியாது போல..
எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தேர்தலின் போது வேட்பு தாக்கலில் முறைகேடு செய்து உள்ளார் ..என்ற வழக்கை சட்டப்படி எதிர் கொள்வார். பாராளுமன்ற திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பது அநாகரிகமான செயல். இவ் விவகாரத்தில் அரசியல் செய்யக்கூடாது என்று தெரிவித்தார்.