
அரியலூர் அண்ணா சிலை அருகில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை நீக்கம் செய்யக்கோரி இந்திய குடியரசுத் தலைவரை வலியுறுத்தி,”மாபெரும் கையெழுத்து இயக்கம்”, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கு.சின்னப்பா அவர்கள் தலைமையில், மதிமுக மாநில விவசாய அணி செயலாளர் வாரணவாசி கி.ராஜேந்திரன் அவர்கள் முன்னிலையில்,
கழக சட்டத்திட்ட திருத்த குழு இணைச்செயலாளர் சுபா.சந்திரசேகர் அவர்கள், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் அவர்கள், இந்திய தேசிய காங்கிரஸ் அரியலூர் மாவட்ட தலைவர் ஆ.சங்கர், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம், AITUC மாவட்ட செயலாளர் தண்டபாணி, திராவிடர் கழக மாவட்ட செயலாளர் மு.கோபால், வி.சி.க தொகுதி செயலாளர் மருதவாணன் ஆகியோர் முதல் கையெழுத்திட்டு துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் தோழமைக் கட்சி நிர்வாகிகள், கழகத் தோழர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். நிறைவாக மதிமுக அரியலூர் மாவட்ட செயலாளர் க.இராமநாதன் நன்றி தெரிவித்தார்.