BREAKING NEWS

கொடைக்கானல்-தனியார் குடியிருப்புக்குள் மேற்குரையை பிழந்து கொண்டு உள்ளே விழுந்த காட்டெருமையால் பரப்பரப்பு

கொடைக்கானல்-தனியார் குடியிருப்புக்குள் மேற்குரையை பிழந்து கொண்டு உள்ளே விழுந்த காட்டெருமையால் பரப்பரப்பு

கொடைக்கானல்-தனியார் குடியிருப்புக்குள் மேற்குரையை பிழந்து கொண்டு உள்ளே விழுந்த காட்டெருமையால் பரப்பரப்பு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செயிண்ட் சாலை சலெத் மாதா சர்ச் அருகே உள்ள பகுதியில் 30 குடும்பங்கள் வசிக்கின்றனர்.

இதில் நேற்று இரவு சுமார் 2:30 மணி அளவில் ராஜன், எபி தயாளன் என்பவர் வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென காட்டெருமை வீட்டின் மேற்குறையை கிழித்துக்கொண்டு வீட்டினுள் குதித்ததாக கூறப்படுகிறது .

சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் காட்டெருமை வீட்டுக்குள் குதித்ததால் ராஜன் எபி தயாளன் இருவரும் என்ன செய்வது என்று அறியாமல் திகைத்து அலறியபடி கதவை திறக்க முயற்சித்தனர் . இருப்பினும் காட்டெருமை அங்கும் இங்கும் வீட்டுக்குள் குதித்துக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கு இடையில் அருகே வசிக்கும் மற்ற குடும்பங்களை சேர்ந்தவர் அதிக சத்தம் கேட்டதால் பதறி அடித்து ராஜன் அவர்கள் வீட்டுக்குள் சென்ற பொழுது உள்ளே காட்டு எருமை இருப்பதைகண்டு இருவரும் உள்ளே சிக்கிருப்பதை உறுதி செய்து முன் கதவை உடைத்து இருவரையும் பாதுகாப்பாக மீட்டதாக கூறப்படுகிறது.

மேலும் முன்பக்க கதவின் வழியாக காட்டெருமை தப்பி ஓடிதாகவும் வீட்டின் இருந்த மற்ற நபர்கள் உடல்நிலை சரி இல்லாத காரணத்தினால் மருத்துவமனைக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது .

இதனால் காட்டெருமை விழுந்த இடத்தில் இருவர் உறங்கிக் கொண்டிருந்ததால் காயமோ உயிர் பலியோ ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் இருந்ததாக கூறப்படுகிறது.

Share this…

CATEGORIES
TAGS