70 ஆண்டு காலமாக காய்கறி மார்க்கெட் நடத்தி வரும் தங்களை நகராட்சி வணிக வளாகத்திற்கு மாற்ற முயற்சிக்கும் முயற்சிக்கு வியாபாரிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு
தேனி மாவட்டம்; போடிநாயக்கனூர் நகராட்சி கட்டியுள்ள வணிகவளாக கட்டிடத்தில் தினசரி காய்கறி மார்க்கெட் ஆனது பரமசிவன் கோயில் பகுதியில் கடந்த 70 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது தற்போது நகராட்சி இவர்களை அப்புறப்படுத்தும் நோக்கத்தோடும் புதிதாக கட்டியுள்ள வணிக வளாகத்திற்கு வருமானம் ஈட்டும் நோக்கத்துடன்,..
வணிக லாபம் ஈட்டும் நோக்கத்தோடு தனிநபருக்கு ஏலம் விடப்பட்டு அதை தனிநபர் கைக்கு சென்று அதிக அளவில் கட்டிட வாடையையும் வைப்புத் தொகையும் கேட்பதால் தங்களால் தர இயலாது என்றும் தாங்கள் தற்பொழுது வைத்துள்ள காய்கறி மார்க்கெட் கடைகளில் குப்பை வரி முதல் கடை வரை அனைத்தும் நகராட்சிக்கு கட்டி வரும் நிலையில் தங்களை வணிக நோக்கத்தோடு நகராட்சி ஒருதலை பட்சமாக ஏலம் எடுத்த தனிநபருக்கு செயல்படுவதாக வியாபாரிகள் பரபரப்பு குற்றச்சாட்டு எழுப்புள்ளனர்.
நகராட்சி தங்களுக்கு இத்தகைய துரோகத்தை செய்வதற்கு பதிலாக ஒரு பாட்டில் விஷத்தை கொடுத்து காய்கறி மார்க்கெட்டில் உள்ள அனைவரையும் கொன்று விட்டால் தாங்கள் நிம்மதியாக இறக்கத் தயார் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளனர் தமிழக அரசு உடனடியாக சுமார் நூற்று இருபதுக்கு மேற்பட்டு உள்ள கடைகளை வைத்து நாள்தோறும் அழுகும் பொருட்களை வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு தக்க அரசு பாதுகாப்பு வழங்கி தாங்கள் 70 ஆண்டு வைத்துள்ள இப்பகுதியில் நாள்தோறும் காய்கறி மார்க்கெட் வைக்க தமிழக அரசு நகராட்சிக்கு ஆணை பிறப்பிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.