BREAKING NEWS

வேடசந்தூர் பணிமனைக்கு இரண்டு புதிய பேருந்துகள் வழங்கும் விழா சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அமைந்துள்ள துணை போக்குவரத்து கழக பணிமனைக்கு இரண்டு புதிய பேருந்துகள் தமிழக அரசு வழங்கியுள்ளது.

அதில் ஒரு பேருந்தினை வேடசந்தூர் பேருந்து நிலையத்திலிருந்து எரியோடு அய்யலூர் வழியாக பூசாரிபட்டி கிராமத்திற்கும், மற்றொரு பேருந்து திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து

வேடசந்தூர் வழியாக சிங்கிலிக்காம்பட்டி கிராமத்திற்கும் ஆகிய இரண்டு வழித்தடத்தில் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன் எம்எல்ஏ கொடியசைத்துதொடங்கிவைத்தார் .

இந்த நிகழ்ச்சியில் வேடசந்தூர் பேரூர் செயலாளர் கார்திகேயன்,வடக்கு ஒன்றிய செயலாளர் கவிதா பார்த்திபன் மற்றும் ஒன்றிய,நகர கட்சி நிர்வாகிகளும் பேருந்து துவக்க விழாவில் காந்திராஜன் mla உடன் கலந்துகொண்டு புதிய பேருந்துகளை துவக்கிவைத்தனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் பேருந்து வேடசந்தூர் பணிமனை கிளை மேலாளர் திண்டுக்கல் தலைமை போக்குவரத்து அலுவலக மேலாளர் உள்ளிட்ட அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

CATEGORIES
TAGS