BREAKING NEWS

மயிலாடுதுறையில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைக்க கோரிக்கை விடுத்து மத்திய அரசுக்கு ஒரு லட்சம் அஞ்சல் கடிதங்கள் அனுப்பும் கையெழுத்து இயக்கம்

மயிலாடுதுறையில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைக்க கோரிக்கை விடுத்து  மத்திய அரசுக்கு ஒரு லட்சம் அஞ்சல் கடிதங்கள் அனுப்பும் கையெழுத்து இயக்கம்

மயிலாடுதுறையில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைக்க கோரிக்கை விடுத்து மத்திய அரசுக்கு ஒரு லட்சம் அஞ்சல் கடிதங்கள் அனுப்பும் கையெழுத்து இயக்கம், பொதுத் தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் பொது தொழிலாளர் சங்கத்தின் மே தின கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. பச்சைக்காளி பவளக்காளி ஆட்டத்துடன் கலைக்குழுவினர் கலை நிகழ்ச்சி உடன் மே தின விழா நடைபெற்றது. தொடர்ந்து ஜி எல் ஓ தொழிலாளர் சங்க கொடியினை திமுக மாவட்ட செயலாளர் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் ஏற்றி வைத்தார்.

தமிழ்நாட்டில் ஆறு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்திருந்த நிலையில், மயிலாடுதுறையில் அமைய உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு விரைந்து வலியுறுத்தி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து பொதுத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஒரு லட்சம் அஞ்சல் அட்டைகள் அனுப்பப்படுகின்றன.

இதற்கான கையெழுத்து இயக்கத்தை திமுக சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொதுத் தொழிலாளர் சங்க அமைப்பின் தலைவர் ஜெகவீரபாண்டியன் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

CATEGORIES
TAGS