
அண்ணா திராவிடத்தில் கடை கோடி தொண்டன் முதல் கழகத்துக்காக உழைத்தால் அவர்களுக்கு உண்டான பதவியில் கிடைக்கும் – அது நான் சொல்லவில்லை அண்ணா திராவிடத்திற்கு உழைத்தவர்களுக்கு தெரியும்.அதிமுக ஆட்சி, எடப்பாடி பழனிச்சாமி தான் முதலமைச்சராக வர வேண்டும் என்று சொல்லியாச்சு டெல்லி மத்திய அரசு பச்சைக் கொடி காட்டி, நம்மை விட ஆர்வமாக இருக்கிறார்கள் – நம்ம வரணுக்கிற விட திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்காக முழு ஆதரவு கொடுக்கின்றனர் – கோவில்பட்டியில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேச்சு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகர் இல்லத்தில் வைத்து தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தரும் கழகப் பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி மக்களே காப்போம் தமிழகத்தின் மீட்போம் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை தரும் குறித்து தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஆலோசனை கூட்டத்தில் தூத்துக்குடி அதிகம் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு பேசுகையில்
நடிகர்கள் பலர் கட்சி ஆரம்பித்தாலும் எம்.ஜூ.ஆரை தவிர யாரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது இல்லை..
ஒரு தொண்டன் கூட முதலமைச்சராகலாம் அதுதான் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்
அண்ணா திராவிடத்தில் கடை கோடி தொண்டன் கழகத்துக்காக உழைத்தால் அவர்களுக்கு உண்டான பதவியில் கிடைக்கும்.
அது நான் சொல்லவில்லை அண்ணா திராவிடத்திற்கு உழைத்தவர்களுக்கு தெரியும்.
இன்றைய நிலைக்கு பாஜக மட்டும் தான் நம்முடைய கூட்டணியில் உள்ளது. இன்னும் பல கட்சிகள் கூட்டணிக்கு வரவுள்ளன. சரியான கூட்டணி அமையும். திமுக கூட்டணி உடையும்
ஆட்சி, கூட்டணி இருந்தும் தமிழக முதல்வர் தொகுதி வாரியாக வேலை பார்க்கிறார். அவர்கள் இவ்வளவு கீழ இறங்க வேண்டிய அவசியம் இல்லை. அது ஒருபுறம் இருந்தாலும் நம்முடைய கடமை நாம் செய்ய வேண்டும்
விடியா திமுக ஆட்சி வீட்டிற்கு போக வேண்டும் என்று மக்கள் மனதில் நூற்றுக்கு நூறு இருக்கிறது
அதிமுக ஆட்சி, எடப்பாடி பழனிச்சாமி தான் முதலமைச்சராக வர வேண்டும் என்று சொல்லியாச்சு டெல்லி மத்திய அரசு பச்சைக் கொடி காட்டி, நம்மை விட ஆர்வமாக இருக்கிறார்கள். நம்ம வரணுக்கிற விட திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்காக முழு ஆதரவு கொடுக்கின்றனர்.
இன்னும் பல வகையில் ஆதரவு வரும்,, , பலவகையில் வேலைகள் வரும் பாஜக தயாராக இருக்கின்றனர், பாஜகவும் நம்முடன் முழு ஒத்துழைப்புடன் வருகின்றனர் என்றார்.