75 ஆவது சுதந்திர தினத் பெருவிழாவை முன்னிட்டு கோவில்பட்டியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார்.


75 ஆவது சுதந்திர தினத் பெருவிழாவை முன்னிட்டு ஜெய்கிரிஸ் அறக்கட்டளை மற்றும் இலக்கிய உலா சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சௌபாக்கியா மஹாலில் நடைபெற்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றது இப்போட்டியில் பேச்சு போட்டி, கட்டுரை போட்டி,நடனம் மற்றும் மாறுவேடம் போட்டி,கையெழுத்து போட்டி, போன்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிட்சைகளை மற்றும் கேடயங்கள் வழங்கி சிறப்புரை ஆற்றினார் . இந்நிகழ்ச்சியில் சுவீடன் வானொலி அன்ரன்தாஸ், ரோட்டரி கிளப் முன்னாள் கவர்னர் விநாயகா ரமேஷ்,கோவில்பட்டி டைனமிக் லயன்ஸ் கிளப் பட்டயத் தலைவர் அட்வகேட் சந்திரசேகர், இலக்கிய உலா நிறுவனர் ரவீந்தர்,திருவள்ளுவர் மன்ற தலைவர் தமிழ் செம்மல் கருத்தப்பாண்டி, இந்திய கலாச்சார நட்புறவு கழக தலைவர் தமிழரசன், எஸ்.எஸ்.டி.எம்.கல்லூரி செயலாளர் கண்ணன், புனித ஓம் பள்ளியின் தாளாளர் லட்சுமண பெருமாள்,சி.எஸ். ஐ பாஸ்ட்ரேட் சேர்மன் தாமஸ், மைக்ரோ பாயிண்ட் நிறுவனர் ஆம்ஸ்ட்ராங், கிப்ட் கன்ஸ்ட்ரக்சன் டேவிட்சன், விளாத்திகுளம்
பி.டி.ஓ முத்துக்குமார் ,ஆ.வை.பள்ளி தாளாளர் சுப்பிரமணியன்,ஜெய்கிருஸ் அறக்கட்டளை இயக்குனர் கார்மல்ஜென்ஸி, நிகழ்ச்சி ஏற்பாடினை ஜெய்கிருஸ் அறக்கட்டளைத் தலைவர் வழக்கறிஞர் ஜெயஸ்ரீ கிருஸ்டோபர். செய்திருந்தனர். நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி, கோபி,பழனி குமார்,வேல்முருகன்,ஜெயசிங், குழந்தை ராஜ், முருகன்,மாயா துரை, உள்ளிட்ட மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
