கழுகுமலை ஸ்ரீ கழுகாசல மூர்த்தி திருக்கோயில் வருசாபிஷேகத்தை முன்னிட்டு. ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம்

கோவில்பட்டி அருகே கழுகுமலை ஸ்ரீ கழுகாசல மூர்த்தி திருக்கோயில் வருசாபிஷேகத்தை முன்னிட்டு.. கோவில்பட்டி ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு பொங்கல் பிரசாதம் மற்றும் 47வது அன்னதானம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலை ஸ்ரீ கழுகாசல மூர்த்தி திருக்கோயில் வருசாபிஷேகத்தை முன்னிட்டு.. கோவில்பட்டி ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு பொங்கல் பிரசாதம் மற்றும் 47வது அன்னதானம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கழுகுமலை காமினி மோட்டார்ஸ் அண்ட் பைனான்ஸ் தொழிலதிபரும், ராகவேந்திரா சேவா அறக்கட்டளையின் தலைவருமான ஜெயக்கொடி வரவேற்றார்.. ஜீவ அனுக்கிரக அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன், நாலாட்டின் புத்தூர் அரசு ஒப்பந்தக்காரர் தொழிலதிபர் காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கழுகுமலை பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சுப்ரமணியன் அவர்கள் தலைமை தாங்கினார்.. சிறப்பு அழைப்பாளர்களாக.. சங்கரன்கோவில் வழக்கறிஞர் அய்யாதுரை பாண்டியன், RMR கடலை மில் அதிபர் ரமேஷ், பங்குவர்த்தனை நிபுணர் ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.. கழுகுமலை காவல் ஆய்வாளர் பத்மாவதி அவர்கள் பொங்கல் பிரசாதம் வழங்கினார்கள்.. கழுகாசலமூர்த்தி திருக்கோவில் செயல் அலுவலர் கார்த்தீஸ்வரன் அவர்கள் அன்னதானத்தை துவக்கி வைத்தார்..
இதில் அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன், தலைவர் ஜெயக்கொடி, செயலாளர் ஜோதி காமாட்சி, பொருளாளர் கார்த்திகேயன், செயற்குழு உறுப்பினர்கள்.. நடராஜன், தங்கராஜ், எஸ் பி பாண்டியன் தொழிலதிபர்கள் தனபால், கொல்லம் சேகர், கழுகுமலை யமஹா டீலர் நாராயணசாமி, நகரச் செயலாளர் கிருஷ்ணகுமார், அறக்கட்டளை வழக்கறிஞர் கார்த்திக், பசுமை இயக்கம் செந்தில், மற்றும் கோவில் நிர்வாகிகள் மாடசாமி, அருண், மூக்காண்டி மற்றும் அனைத்து கோவில் நிர்வாகிகளும் நிகழ்ச்சியை சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சியின் முடிவில் மகாலட்சுமி ஆட்டோ கன்சல்டிங் உரிமையாளர் தொழிலதிபர் காளிராஜ் நன்றி கூறினார்.