தீண்டாமை தடுப்பு சுவர் எழுப்பி வருவது குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு!

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு வட்டம் பகுதியைச் சேர்ந்த கோபி த/பெ. கோவிந்தன். பல்லலகுப்பம் கிராமம் மற்றும் அஞ்சல் மேல்பட்டி வழி என்ற பகுதியில் வசித்து வருகிறார். கடந்த 22 /05/ 2013இல் கிரையம் பெற்றார்.
தற்போது பேரணாம்பட்டு வட்டம், பல்லலகுப்பம் கிராமம் சர்வே எண் 148/4 A, அம்பேத்கர் நகர் என பெயரிட்டுள்ள சொத்தின் மதிப்பு சுமார் ரூ.25 லட்சம். 25 மனை பிரிவில் மனை எண் 25 மற்றும் 24 கலந்தார் போல உள்ள சுமார் 1608 சதுர அடியினை கிரையம் பெற்று வீடு கட்டியதிலிருந்து வெளியில் யாரும் வரக்கூடாது என்று தடை செய்து தீண்டாமை தடுப்பு சுவர் எழுப்பி வருகின்றனர்.
இது குறித்து தட்டிக் கேட்டதற்கு நீ யாரிடம் போய் சொன்னாலும் என்னை எதுவும் செய்ய முடியாது என்று 1,ரங்கநாதன் த/பெ. துரைசாமி நாயுடு, 2, ராஜேந்திரன் த/பெ.திருவேங்கடம், 3, கமலநாதன் த/பெ. நடேசன் செட்டியார், 4, ஹரிகிருஷ்ணன் த/பெ.கோவிந்த மந்திரி ஆகிய நான்கு நபர்களும் அருகே. உள்ள வீட்டு மனைகளையும் விற்பனை செய்து விட்டனர்.
ஆனால் மேற்படி நான்கு நபர்களும் ஒன்று சேர்ந்து கொண்டு எங்களையும் எங்கள் குடும்பத்தாரையும் மிரட்டி வருகிறார்கள். நாங்கள் ஆதிதிராவிடர் (எஸ்சி) என்பதால் மேற்படி தெருவில் தீண்டாமை தடுப்பு சுவர் கட்டி வருகிறார்கள்.
எனவே மேற்படி நபரில் ஒருவரான ரங்கநாதன் என்பவரின் மகள் கல்யாணி கணவனை இழந்த விதவை என்பவரை தூண்டிவிட்டு மேற்படி தீண்டாமை சுவர் கட்டி கிராமத்தில் பங்கம் விளைவித்து வரும் நபர்களின் மீதும் வன்கொடுமை சட்டம் எஸ்சி/ எஸ்டி, ACT 1989 சட்டத்தின் படி நடவடிக்கை எடுத்து மேற்படி தீண்டாமை தடுப்பு சுவரை அப்புறப்படுத்தியும், கிராமத்தை அமைதியை நிலைநாட்டியும் உத்தரவிட வேண்டுமாறு கிராமத்தின் குடியிருப்போர், பொதுமக்கள் சார்பாகவும்,
தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று அந்த மனுவில் குறிப்பிட்டு உள்ளனர். மேலும் அம்பேத்கர் நகர் என மனை பிரிவுக்கு பெயரிட்டு எஸ்சி, மக்களுக்கு கிரையம் செய்து கொடுத்து விட்டும் :ரங்கநாதன் என்பவரின் மகள் கல்யாணி என்பவர் தெருவுக்கு செல்லும் சாலையை ஆக்கிரமிப்பு செய்து சுவர் எழுப்பி கட்டி வந்துள்ளார்.
தெருவுக்கு செல்ல உள்ள வழியை தடை செய்து வருகிறார். குறிப்பாக பொது இடத்தையும் ஊராட்சிக்கு எழுதிக் கொடுக்காமலும் அரசையும் ஏமாற்றி தற்போது தீண்டாமை சுவர் எழுப்பி கிராமத்தில் சாதி வெறியினை ஏற்படுத்தி அதில் இன்பம் காணும் செயலை அரங்கேற்றி வருகின்றனர்.
மேலும் பேரணாம்பட்டு சார் பதிவு அலுவலகத்திலும் பொது இடங்களையும், வட்டார வளர்ச்சி அலுவலர் பி. டி .ஓ .வுக்கும் மனு எழுதிக் கொடுக்காமலேயே அனைத்து மனைகளையும் பத்திரப்பதிவு செய்துள்ளனர்.
தற்போது டி. டி .சி .பி , அங்கீகாரத்தை வரைமுறைப் படுத்தி ஆணை இருந்தும் அதனை கடைப்பிடிக்க தவறிய பி .டி .ஓ. நிர்வாக அரசின் திட்டத்தில் வீடு கட்டட அனுமதி வழங்கி உள்ளது வேதனையை அளிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்படி மனு மீது மாவட்ட ஆட்சியர் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு எங்கள் பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தையும் ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து அதை முறையாக அளந்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அப்பகுதி மக்கள் மனவேதனையோடு மனுவில் தெரிவித்துள்ளனர்.