
தென்காசியில் திருவள்ளுவர் கழகம் என்ற அமைப்பு 99 ஆண்டுகளாக தமிழ் பணியாற்றி வருகிறது.
வ உ சி, ராஜாஜி , ம.பொ.சி, கருணாநிதி தொடங்கி இந்த கழகத்தில் பேசாத தமிழ் அறிஞர்களே இல்லை.
தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி உள்ள இடத்தில் ஒரு சிறிய அறையில் இந்த கழகம் செயல்பட்டு வருகிறது.
மாதந்தோறும் திருக்குறள் ஆய். வரங்கும் கருத்தரங்கம், ஆண்டுதோறும் மே மாதம் பத்து நாட்கள் திருக்குறள் விழா வெகு விமர்சையாக நடக்கும்.
இந்த நிகழ்ச்சிக்காக கோவிலை ஒட்டி உள்ள இடத்தில் பிரத்தியேகமாக ஒரு அரங்கம் கட்டப்பட்டிருக்கிறது.
அரங்கத்தில் எதிரே பார்வையாளர்கள் அமர்ந்து நிகழ்ச்சியை கண்டு களிக்க காலியிடம் இருக்கிறது.
இந்த காலி இடத்தில் தற்போது காலணிகள் மற்றும் பொருள் பாதுகாப்பு வைப்பதை கட்டுவதற்காக கோவில் நிர்வாகம் தீவிரம் காட்டி அதற்கான வேலைகளை செய்துள்ளது.
இந்த இடத்தில் கட்டிடம் வந்து விட்டால் திருக்குறள் நிகழ்ச்சிகள் நடத்துவது என்று என்பது இனி இல்லாமல் போய்விடும்.
வரும் மே மாதம் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் நிலையில் பார்வையாளர்கள் அமருமிடத்தில் கட்டிடம் கட்ட குழி தோண்டி தமிழ் பணிக்கு மூடு விழா நடத்த திட்டமிட்டு வருகிறது கோவில் நிர்வாகம்.
இந்தப் பணிகளை நிறுத்த கோரி திருவள்ளுவர் கழகத் தலைவர் வழக்கறிஞர் ந.கனகசபாபதி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மனு அனுப்பியுள்ளார்
நூறாவது ஆண்டு விழா கொண்டாடப் போகும் இந்த நேரத்தில் இப்படி இடையூறு செய்யலாமா ? தமிழ் பணி என்னாவது?
திருக்குறளாவது .. தமிழாவது.. கோவிலுக்கு வருமானம் தான சார் முக்கியம்…
சிவனடியார்களும் பொதுமக்களும் மிகுந்த வேதனையுடன் கூறினர் இதனால் தென்காசியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது