
அரசியல் களம் மிகவும் விசித்திரமானது. இங்கு நிரந்தர நண்பனும் இல்லை,நிரந்தர பகைவர்களும் இல்லை என்று கூறுவார்கள். ஆனால் துரோகிகளும் சில நேரங்களில் நண்பராக மாறிவிடுவது தான் அரசியலின் விசித்திரம்.
இதற்கு உதாரணமாக ஆந்திர மாநில அரசியலில் நடந்த நிகழ்வுகளை பார்ப்போம் :
ஆந்திர திரைப்பட உலகில் சூப்பர் ஸ்டார் ஆகவும் ஆந்திர மக்களால் கடவுளாகவும் ( தேவுடு) பார்க்க பட்ட N.T. ராமராவ் அவர்கள் 1982 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் என்ற கட்சியை துவக்கி அதன் பிறகு 7 மாதங்களில் நடந்த ஆந்திர மாநில சட்டமன்ற பொது தேர்தலில் பலம் வாய்ந்த காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி விட்டு ஆட்சியை அமைகிறார்.
1983இல் நடந்த பொதுத் தேர்தலில் மொத்தமுள்ள 294 தொகுதிகளிலும் போட்டியிட்ட ராமாராவின் தெலுங்கு தேச கட்சி, 199 இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. ஆந்திராவின் 10ஆவது முதல்வராகவும், ஆந்திராவின் முதல் காங்கிரஸ் அல்லாத முதல்வராகவும பதவியேற்றார் ராமாராவ்.
இவரது அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தவர் பாஸ்கர் ராவ் முதல்வராக பதவியேற்ற சில மாதங்களிலேயே உடல் நலம் குன்றிய NTR தனது அமைச்சரவையில் தனக்கு அடுத்த நிலையில் இருந்த பாஸ்கர் ராவ் அவர்களிடம் ஆட்சி பொறுப்பை ஒப்படைத்து விட்டு சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார்.
அப்போது மத்தியில் இந்திரா காந்தி அவர்களின் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று கொண்டு இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் பேச்சை கேட்டு கொண்டு சிகிச்சை முடிந்து திரும்பி வந்த NTR அவர்களிடம் ஆட்சியை ஒப்படைக்க பாஸ்கர் ராவ் மறுக்கிறார்.
இந்த நிகழ்வு அகில இந்திய அளவில் பேசு பொருளாக மாற்றுகிறது. NTR அவர்களுக்கு ஆதரவாக வாஜ்பாய்,சந்திரசேகர் உட்பட 17 கட்சிகள் NTR அவர்களை ஆதரித்தனர். NTR அவர்களுக்கு மெஜாரிட்டி MLAக்கள் ஆதரவு இருக்கின்றது. இந்திய அரசியல் வரலாற்றில் அப்போது தான் MLA கடத்தி அடைக்கப்படும் நிகழ்வு நடைபெறுகிறது.
அனைத்து MLA க்களும் பெங்களூருக்கு கடத்திச் சென்று ஒரே இடத்தில் அடைத்து வைக்கப்படுகின்றனர். அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் மீண்டும் NTR முதல்வராக வருவதை தடுக்க தன்னால் முடிந்த அத்தனை இடையூறுகளையும் தந்தார் அப்போதைய ஆந்திர பிரதேச ஆளுநர் S.D. சர்மா. NTR அவர்களுக்கு ஒத்துழைப்பு தர மறுக்கிறார்.
பிறகு அனைத்து MLAக்களும் டெல்லி அழைத்துச் செல்லப்பட்டு ஜனாதிபதி முன்பாக மெஜாரிட்டி நிரூபிக்கப்பட்டு NTR மீண்டும் முதல்வராகிறார்.இந்த ஆப்ரேஷன் முழுவதையும் முன்னின்று நடத்துபவர் அப்போதைய NTR அவர்களின் மாப்பிள்ளை சந்திரபாபு நாயுடு,
என்.டி.ராமா ராவ் அவர்கள், 1989 ஆம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.
1993 செப்டம்பர் 11ஆம் நாள் ஐதராபாத்தில் தனது வீட்டில் என்.டி.ஆர் லட்சுமி சிவபார்வதி என்ற கல்லூரிப் பேராசிரியையை மறுமணம் செய்துகொண்டார். அப்போது என்.டி.ஆருக்கு 70 வயது லட்சுமி சிவபார்வதிக்கு 38 வயது.
அதன் பின் 1994ஆம் ஆண்டு நடந்த ஆந்திர சட்டசபைத் தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்தது. என்.டி.ஆர் முதலமைச்சரானார். சிவபார்வதியின் ஆதிக்கம் அரசியலில் அதிகமாகியதைத் தொடர்ந்து கட்சியில் உட்பூசல்கள் வந்தன.
என்.டி.ஆரின் மருமகனான சந்திரபாபுவும், மகனான நடிகர் பாலகிருஷ்ணாவும் NTR அவர்களுக்கு எதிர்அணியாக மாறி தெலுங்குதேசம் கட்சியை உடைகின்றனர். பின்பு உட்கட்சி பூசல் தாங்காமல் 1995இல் ராமராவ் ராஜினாமா செய்தார்.
அதனையடுத்து தனது மாமனர் NTR அவர்களை ஓரங்கட்டிவிட்டு சந்திரபாபு நாயுடு சட்டசபையில் ஓட்டெடுப்பு நடத்தி முதல் மந்திரியானார்.
இப்போது சந்திரபாபு நாயுடு அமைத்துள்ள மந்திரிசபையில் முதலில் NTR அவர்களுக்கு துரோகம் செய்த பாஸ்கர் ராவ் அவர்களின் மகன் நாதென்ட்லா மனோகர், தெனாலியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.வாகவும் , ஆந்திரப் பிரதேச அரசின் சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில் தற்போதைய அமைச்சராகவும் உள்ளார்.
இதை தான் அரசியல் என்று கூறுகிறார்கள்.