99 தமிழ் பூக்கள் பெயர்களை எல்.கே.ஜி படித்து வரும் 4 வயது சிறுவன் 90 வினாடிகளில் செல்லி அசத்தல்.

கபிலர் இயற்றிய குறிஞ்சி பாடலில் கூறப்பட்டுள்ள 99 தமிழ் பூக்கள் பெயர்களை எல்.கே.ஜி படித்து வரும் 4 வயது சிறுவன் 90 வினாடிகளில் அனாயசமாக சொல்லி அசத்தி வருகிறான்.
மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளான நவம்பர் மாதம் 14ம் தேதி குழந்தைகள் தினமாக ‘கொண்டாடப்பட்டு வரும் வேளையில் தஞ்சையை சேர்ந்த காசி விஸ்வநாதன்.
லாவன்யா தம்பதியினரின் 4 வயது மகன் விஷ்வந்த் கபிலர் இயற்றிய குறிஞ்சி பாடலில் கூறப்பட்டுள்ள காந்தன், ஆம்பல், அணிச்சம், குவளை, குறிஞ்சி என தொடங்கி நாகப்பூ, நள்ளிருணாறி, குருந்தம், வேங்கை, புழகு என முடித்து,
99 தமிழ் பூக்கள் பெயர்களை தனது மழலை வார்த்தையில் 90 வினாடிகளில் அழகாக கூறி புன்முறுவல் பூத்து நன்றி கூறி முடித்தான் குட்டி சிறுவன் விஷ்வந்த்.
CATEGORIES தஞ்சாவூர்