தலைப்பு செய்திகள்
சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்க இரண்டு பேர் எதிர்க்கிறாங்க!

“சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்கக்கூடாது என்பதற்காக கட்சியில் உள்ள இரண்டு பேர், நான்கு பேர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்” என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
திருச்செந்தூரில் மார்ச் 4-ம் தேதி சசிகலாவை சந்தித்ததால் அதிமுகவில் இருந்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா நீக்கப்பட்டார். இந்நிலையில் தஞ்சாவூரில் சசிகலாவின் கணவர் எம்.நடராஜனின் 4-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில் ஓ.ராஜா கலந்து கொண்டார். இதுகுறித்து அவரிடம் இன்று பேசினோம்.
CATEGORIES Uncategorized
