மாவட்ட செய்திகள்
மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் லஞ்சம் பெறுவதாக மேயரிடம் முன்னாள் காங்கிரஸ் மேயர் புகார் மனுவால் பரபரப்பு.

மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் லஞ்சம் பெறுவதாக மேயரிடம் முன்னாள் காங்கிரஸ் மேயர் புகார் மனுவால் பரபரப்பு
கடந்த மாதம் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சியை திராவிட முன்னேற்ற கழகம் கைப்பற்றியது. தொடர்ந்து திருச்சி மாநகராட்சி மேயராக மாமன்ற உறுப்பினரும் திமுக மாநகரச் செயலாளருமான அன்பழகன் மேயராக பதவி ஏற்றார்.

இதனையடுத்து இன்று காலை முதல் பொது மக்களிடம் மனுக்கள் பெறப்படும் என அறிவித்தார்.
இன்று பொதுமக்கள் மேயரிடம் மனுக்கள் அளித்தனர். அப்போது திருச்சி காங்கிரஸ் கட்சியின் சார்பில் மேயராக பதவி வகித்து வந்த முன்னாள் மேயர் எமிலி ரிச்சர்ட் மேயர் அன்பழகன் இடம் புகார் மனு வழங்கினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்
திருச்சியில் பல்வேறு பகுதிகளில் தரை கடை, தள்ளுவண்டி சிறிய டீக்கடைகள் ஆகியவை செயல்பட்டு வருகிறது. இவர்கள் அன்றாடம் பிழைப்பு நடத்தி வருகின்றனர் இவர்களிடம் மாநகராட்சி சேர்ந்த பலர் லஞ்சம் பெற்று வருவதாக தெரிவித்தார். மேலும் காவல்துறையினரும் அவர்களை மிரட்டி லஞ்சம் பெறுகின்றனர் என கூறிய அவர் தான் மேயராக இருந்த பொழுது ரயில் நிலையம் பகுதியில் செயல்பட்டு வந்த கடைகளை முறைப்படுத்தி அவர்களுக்கு சிறிய வகையில் வரி செலுத்தும்படி செய்து நிரந்தரம் செய்யப்பட்டு அடையாள அட்டையுடன் அங்கீகாரம் அளிக்கப்பட்டது அதைப்போல தற்போது செயல்படுத்த வேண்டும் என தெரிவித்தார். மேலும் கடைகளில் யாரேனும் லஞ்சம் கேட்டால் உடனடியாக இரவு நேரம் இருந்தாலும் என்னுடைய தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும் என கூறினார்.

திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் முன்னாள் மேயர் எமிலிரிச்சர்ட் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மீது கொடுத்த புகார் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொதுமக்களிடம் மனு பெறும் நிகழ்வில் துணை மேயர் திவ்யாதன்ஸ், மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் ஆகியோர் உடனிருந்தனர்
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
