BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தேனி மாவட்டம் தேவாரம் அருகே மேட்டுப்பட்டி கணவர் மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை.

தேனி மாவட்டம் தேவாரம் அருகே மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி இவரது மனைவி பிரேமலதா. பிரேமலதா விற்கு சில காலங்களாக வேறொருவருடன் தொடர்பு இருந்ததாக கூறப்படும் நிலையில் பிரேமலதா மீது அவரது கணவர் வெள்ளைச்சாமி சொத்துக்களை வாங்கி உள்ளார்.

இந்நிலையில் சொத்துக்களை மீண்டும் தனது பெயருக்கு மாற்றி தர வெள்ளைச்சாமி அறிவுறுத்திய சூழ்நிலையில் அதனை பிரேமலதா மறுத்துவந்ததாகவும் அதனால் ஆத்திரம் கொண்ட வெள்ளைச்சாமி இன்று அவரது மனைவி தேவாரம் மேட்டுப்பட்டி கனரா வங்கிக்கு செல்லும்போது வங்கியின் உள்ளேயே அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்யும் நோக்கத்தோடு படுகாயம் ஏற்படுத்தினார். இந்நிலையில் படுகாயமடைந்த பிரேமலதா உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )