மாவட்ட செய்திகள்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் தாமரை டிரஸ்ட் அறக்கட்டளையின் அலுவலகம் திறப்பு விழா.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் தாமரை டிரஸ்ட் அறக்கட்டளையின் அலுவலகம் திறப்பு விழா நடந்தது.முத்துமாரி மலைகண்ணன், ராஜகுனம் முனியசாமி, ராமலட்சுமி ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். கவுன்சிலர் கருப்பண்ணன், முன்னாள் ஊராட்சி தலைவர் மலைக்கண்ணன், துணைப்பதிவாளர் ஓய்வு இளங்கோவன் தலைமை வகித்தனர்.டிரஸ்ட் பொறுப்பாளர் சகுந்தலா திருக்கண்ணன் அனைவரையும் வரவேற்றார். திறப்பு விழாவை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் மற்றும் தொழிற்பயிற்சி மையத்தில் மதிய உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.முடிவில் ஈஸ்வரி கருமலையான் நன்றி கூறினார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES Uncategorized
