BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

ஒன்றிய அரசு என அறிக்கையில் வெளியிடு – திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் பிஜேபி விவசாய அணியினர் முற்றுகை.

ஒன்றிய அரசு என அறிக்கையில் வெளியிடு – திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் பிஜேபி விவசாய அணியினர் முற்றுகை

பாரதிய கிசான் திட்டத்தின் கீழ் நிலம் உள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூபாய் 2,000 விதம் மத்திய அரசு வழங்கி வருகிறது. திருச்சி மாவட்டத்தில் இத்திட்டத்தின்கீழ் பயன் பெற்ற விவசாயிகள் 10 முறை அவரவர் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.


இனிவரும் காலங்களில் இத்திட்டத்திற்கு விவசாயிகள் தங்களது ஆதார் அட்டையை இணைக்கப்பட வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது இது தொடர்பான அறிக்கையை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளியிட்ட போது மத்திய அரசு என்பதற்கு பதிலாக ஒன்றிய அரசு என தெரிவித்துள்ளார்.

இதனை கண்டித்து திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி விவசாய அணியின் மாவட்ட தலைவர் சுப்ரமணியன் தலைமையிலான கட்சியினர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயப் குறைதீர் கூட்டத்தில் போது மாவட்ட ஆட்சியர் சிவராசுவை முற்றுகையிட்டு ஒன்றிய அரசு என எப்படி அறிக்கை வெளியிடலாம் ஒன்றிய அரசு என ஏதேனும் அரசாணை உள்ளதா என கேள்வி கேட்டு வாக்குவாத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சிவராசு இதுகுறித்து உரிய தகவல் கொடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )