BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தாராபுரத்தில் வருவாய் ஆய்வாளர் ரூபாய் 25,000 லஞ்சம் வாங்கி கையும் களவுமாக பிடிபட்டார் அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கைது செய்தால் பரபரப்பு.

திருப்பூர் மாவட்டம்தாராபுரம் அருகே தடையின்மை சான்று பெற ரூ.25ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் ஆர்.டி.ஓ அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். கோட்டாட்சியர் அலுவலகத்தில் தொடர் விசாரணையால் பரபரப்பு
தாராபுரம் அருகே உள்ள பொன்னாபுரம் தேவநல்லூர் பகுதியை சர்ந்த கருப்பன் தேவர் ( 75 ).இவருக்கு அதே பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு கருப்பண்ண தேவருக்கு நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் 2.18 ஏக்கர் நிலம் தானமாக அரசு வழங்கியது. அந்த நிலத்தில் பயிர் செய்து தந்த கருப்பண தேவருக்கு ராஜேந்திரன் என்ற மகன் உள்ளார்.இவரும் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூருக்கு குடும்பத்துடன் தொழில் நிமிர்த்தமாக சென்றார்.தற்பொழுது திருப்பூர் தாராபுரம் ரோட்டில் செங்காடு பகுதியில் பிரின்டிங் பட்டறை நடத்தி வருகிறார்.இவருடைய தந்தை கடந்த 4ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். அதனை 25 ஆண்டுகள் கழித்து வீட்டுமனை பட்டா தன் பெயரில் மாற்றிக் கொள்ளலாம் என்ற விதி முறையின் அடிப்படையில் அந்த நிலத்துக்கு தடையில்லா சான்றிதழ் வாங்க தாராபுரம் தாசில்தார் அலுவலகத்தில் ராஜேந்திரன் விண்ணப்பித்தார். பிறகு அந்த விண்ணப்பத்தை தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதனை சான்றிதழ் தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் மகேந்திர வில்சன் (45)என்பவரிடம் ராஜேந்திரன் விசாரணைக்கு ஆஜரானார்.அப்போது இந்த நிலத்தின் பட்டாவை நில உச்சவரம்பு இருப்பதை தடையின்றி சான்று கிடைக்க ரூ. 50 ஆயிரம் பணம் கொடுக்க வேண்டுமென கேட்டுள்ளார். அதற்கு ராஜேந்திரன் பணம் கொடுக்க மனம் இல்லாததால் 25 ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்கு ஒப்புக்கொண்ட பிறகு இன்று பணம் தருவதாக கூறி விட்டு வந்து விட்டார்.பிறகு லஞ்சம் கொடுக்க மனமில்லாத ராஜேந்திரன் திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு நேற்று காலையில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி தட்சிணாமூர்த்தி தலைமையில் கொண்ட இன்ஸ்பெக்டர் சசிரேகா தலைமையிலான லஞ்ச ஒழிப்புபோலீசார் ரசாயனம் தடவிய நோட்டுக்களை ராஜேந்திரனிடம் கொடுத்து அனுப்பினர். லஞ்ச ஒழிப்புத்துறை வழிகாட்டுதல்படி இன்று 3 மணி அளவில் ராஜேந்திரன் கோட்டாட்சியர்அலுவலகத்திலிருந்து சென்று ராஜேந்திரன் தன் கையில் வைத்திருந்த பணம் ரூ.25 ஆயிரத்தை வருவாய் ஆய்வாளர் மகேந்திர வில்சன் கொடுத்தார்.அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். அப்போது அவர்கள் பிடியிலிருந்து தப்பி ஓட முயற்சித்தார் தொடர்ந்து காவல்துறையினர் ரவுண்டு கட்டி அவரை கைது செய்தனர் இதனால் கோட்டாட்சியர்
அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வில்சன் மகேந்திரனை விசாரணை செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )