BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருச்சி திருவெறும்பூர் காட்டூர் பகுதி அரசு ஆதி திராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வகுப்பறை கட்டிடத்தை சீரமைத்து புதுப்பித்து, ஆற்றல் அறக்கட்டளை ஒப்படைத்தது.

திருச்சி திருவெறும்பூர் காட்டூர் பகுதி அரசு ஆதி திராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வகுப்பறை கட்டிடத்தை சீரமைத்து புதுப்பித்து, ஆற்றல் அறக்கட்டளை ஒப்படைத்தது

அடுத்து என்ன படிப்பது பிளஸ் 2 மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு கலந்துரையாடல் நடைபெற்றது

திருச்சி திருவெறும்பூர்

‘ஆற்றல் அறக்கட்டளை’ என்கிற லாப நோக்கமற்ற அமைப்பு ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்டு சமுதாய முன்னேற்றத்திற்காக செயல்பட்டு வருகிறது.

இன்று திருச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறையின் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள 12 வகுப்பறைகள் கொண்ட இரண்டு மாடி கட்டிடம் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு திருமதி கயல்விழி செல்வராஜ்அவர்களின் வழிகாட்டுதலின் பேரிலும் ஆற்றல் பவுண்டேஷன் சார்பில் சுமார் 15 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டு மாணவர்களின் கரங்களால் ஆற்றல் அசோக்குமார் முன்னிலையில் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்பட்டது


இதன் நிறுவனர், நிர்வாக அறங்காவலர் ‘ஆற்றல்’ அசோக் குமார். தலைமையில் செயல்படும் இந்த அமைப்பு முதற்கட்டமாக ஈரோடு, திருப்பூர், நாமக்கல், திருச்சி ஆகிய நான்கு மாவட்டங்களில் ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி
அரசு பள்ளிகளை மேம்படுத்தும் சமுதாயப் பணியை அறக்கட்டளை சார்பில் செயல்படுத்தப்படுகிறது

தொடர்ந்து நான்கு மாவட்டங்களில் பழுதுபட்டுள்ள அரசு பள்ளிகள் கண்டறியப்பட்டு, அங்குள்ள வகுப்பறைகள், கழிவறைகள், சத்துணவு கூடங்கள் பழுது நீக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு உள்ளாட்சி அமைப்பு நிர்வாகிகள் முன்னிலையில் மாணவச் செல்வங்கள் மகிழ்ச்சி பொங்க புதுப்பிக்கப்பட்ட பள்ளி வகுப்பறைகளை திறந்து வைத்துள்ளனர்

“இளைஞர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் ‘நமது பள்ளிகள்’ என்ற சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம். சமுதாய நலனுக்கான இந்தத் திட்டத்தின் நோக்கத்தை பொது மக்களிடம் முழுமையாக கொண்டுசேர்ப்பதுதான் எங்களுடைய முதல் கடமை” என்று ‘ஆற்றல்’ அசோக் குமார் தெரிவித்தார்.

கடந்த நான்கு மாதங்களில் ஈரோடு, நாமக்கல், திருப்பூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் 23 பள்ளிகளை ஆற்றல் அறக்கட்டளை சீரமைத்து ஒப்படைத்துள்ளது
மேலும் 30 பள்ளிகளில் மேம்பாட்டுப் பணிகளை ஆற்றல் அறக்கட்டளை தற்போது மேற்கொண்டுவருகிறது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )