சினிமா
இந்திய சினிமாவுக்கு பெருமை: ‘ஆர்ஆர்ஆர்’ பற்றி அல்லு அர்ஜுன்.

’ஆர்ஆர்ஆர்’ படம் இந்திய சினிமாவுக்கு பெருமை என்று நடிகர் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.
ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில், ராஜமவுலி இயக்கியுள்ள படம், ’ஆர்ஆர்ஆர்’. டிவிவி தானய்யா தயாரித்துள்ள இந்தப் படத்தில் இந்தி நடிகர் அஜய்தேவ்கன், சமுத்திரக்கனி, வெளிநாட்டு நடிகை ஒளிவியா மாரிஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். ஆலியா பட், ராம் சரணின் காதலியாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தை, லைகா நிறுவனம் தமிழில் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 550 தியேட்டர்களில் இந்தப் படம் நேற்று வெளியாகி இருக்கிறது. பலத்த வரவேற்பை பெற்றுள்ள இந்தப் படத்தை பலர் பாராட்டி வருகின்றனர். இந்தப் படத்தை நடிகர் அல்லு அர்ஜுனும் பாராட்டியுள்ளார்.
இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அற்புதமான ஒரு படத்தைத் தந்த ’ஆர்ஆர்ஆர்’ குழுவுக்கு பாராட்டுகள். நம் பெருமைமிகு இயக்குநர் ராஜமவுலிக்கு என் மரியதையை தெரிவிக்கிறேன். சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் ராம் சரண் பற்றி மகிழ்ச்சி அடைகிறேன். ஜூனியர் என்.டி.ஆரும் மிரட்டலாக நடித்துள்ளார். அஜய் தேவ்கன், ஆலியா பட் உட்பட படக்குழுவுக்கு சிறப்பு வாழ்த்துகள். இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்த்த அனைவருக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
