BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருச்சி அருகே கோவில் திருவிழாவிற்கு குடிப்பதற்காக கள்ளச்சாராயம் காய்ச்சிய நபர் கைது.


திருச்சி மாவட்டம், முசிறி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு தொட்டியம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சி மாவட்ட மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி முத்தரசு உத்தரவின்பேரில் ஆய்வாளர் சுமதி தலைமையில் காவலர்கள் இங்கர்சால், கார்த்திக், வசந்தகுமார், சதீஷ், சகாயராஜ் அடங்கிய தனிப்படையினர் தொட்டியம் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது தொட்டியம் பெரிய வாய்க்கால் கரையில் வெங்கடாசலம் என்பவரது தோட்டத்தில் அமைந்துள்ள வெற்றிலை கொடிகளில் கண்ணன் என்பவர் பதுக்கி வைத்திருந்த நாலு லிட்டர் சாராயத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.

மேலும் பெரிய வாய்க்கால் கரையில் சாராயம் காய்ச்சுவதற்காக வைத்திருந்த 100 லிட்டர் ஊரலையும் அழித்தனர்.மேலும் சாராயம் காய்ச்சுவதற்காக வைத்திருந்த பேரல், பானை உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்யபட்டது. சாராயம் காய்ச்சிய தொட்டியம் சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் விசாரணையில் தொட்டியம் பகுதியில் பங்குனி தேர் திருவிழா நடைபெற உள்ள நிலையில் அங்கு விற்பதற்காக கள்ள சாராயம் காய்ச்சப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )