மாவட்ட செய்திகள்
கொடைக்கானல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு முன்பாக(1972 வது வருடம்) பயின்ற முன்னாள் மாணவர்களின் மாபெரும் சந்திப்பு பெருவிழா.

கொடைக்கானல் அரசு மேல்நிலைப்பள்ளியில் காலை சுமார் 9.45 மணி அளவில் பள்ளி வளாகத்தில் 1972 ஆம் ஆண்டு இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் அனைவரும் 50 ஆண்டுகளை கடந்து மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டு மாபெரும் சந்திப்பு என்னும் பெருவிழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு இம் மாணவர்களின் முன்னாள் ஆசிரியர்களான
திரு. மகாதேவன் மற்றும் திரு.மோகன்ராம் ஆகியோர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு மாணவர்களுடன் பள்ளியில் பழகிய பருவ காலங்களை நினைவு கூர்ந்து மாணவர்களுக்கு நல்லாசி வழங்கி சிறப்பு செய்தனர். மேலும் இவ் ஆசிரியர்களுக்கு கொடைக்கானல் ஜியோன் இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளர் மற்றும் இப்பள்ளியின் முன்னாள் மாணவருமான டாக்டர் குரியன் ஆபிரகாம் அவர்கள் ஆசிரியப் பணியின் சிறப்பினையும் , அளத்தற்கு அரிய அறப்பணி தொண்டினையும் நினைவுகூர்ந்து பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தி வாழ்த்துரை வழங்கினார்.

இவ்விழாவின் அமைப்பாளர் மற்றும் கொடைக்கானல் கிறித்துவக் கல்லூரியின் தாளாளர் மற்றும் முதல்வருமான டாக்டர் சாம் ஆபிரகாம் அவர்களது உரையில் இன்று சிறப்புடன் விளங்கும் தமிழக முதல்வருமான அனைத்து மக்களாலும் இன்று ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவருமான, இன்றைய தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொண்டு , முன்னாள் மாணவர்களும் , பெரும் தொழில் நிறுவன முதலீட்டாளர்களும் அரசுப் பள்ளிகளை தத்தெடுக்க வேண்டி முதல்வர் திரு ஸ்டாலின் அவரது திருநாமங்களால் அறைகூவல் விடுக்க வேண்டி கோரிக்கை விடுத்துள்ளார், மேலும் இந்தியாவில் ஜிஎஸ்ஆர் எனப்படும் சமூக நலப் பணி வரி அதிகமாக செலுத்தும் மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாம் இடம் பெற்றுள்ளது , இத்தகைய வரி செலுத்துவதில் இருந்து 2% வரிவிலக்கு கோருப வர்களுக்கு அரசுப் பள்ளிகளை தத்தெடுத்தல் புனரமைத்தல் மற்றும் சீர்செய்தல் என்னும் பல்வேறு நலத்திட்டங்களை ஆற்றிட வழிவகை செய்ய வேண்டி கோரிக்கை விடுத்தார் மேலும் கல்விக்கு என்று தனி நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்த முதல்வர் அவர்களுக்கு பல்வேறு பாராட்டுகளை தெரிவித்தார், எதிர்கால நலனை கருத்தில் கொண்டு செயல்பட்டு வரும் தமிழக முதல்வரை மக்கள் அனைவரும் தங்களுடைய முதல்வராகவே பார்க்கிறார்கள் என்று பெருமைப்படக் கூறினார் (இச்செய்தி சபையினில் குறிப்பிடத்தக்க வரவேற்பு பெற்றது என்பது சிறப்பாகும்)
இவ்விழாவில் இப்பள்ளிக்கு தேவையான கணிப்பொறிகள் ,அச்சு இயந்திரங்கள் மற்றும் பாதுகாப்பு நலன் கருதி இரும்பு கதவுகள் , கேமராக்கள், கழிப்பிட வசதிகள் என பல்வேறு நலத்திட்டங்களை இப்பள்ளிக்கு வழங்கி அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்ந்துள்ளனர் என்பது மேலும் ஒரு சிறப்பாகும் , இதனைப் போன்று முன்னாள் மாணவர்களும் பெரும் தொழில் நிறுவன முதலீட்டாளர்களும் அரசு பள்ளிகளை தத்தெடுக்க முன்வர இவர்கள் முன்மாதிரியாக திகழ்ந்து உள்ளனர்.
இந்நிகழ்வு அனைவரது மனதிலும் நீங்கா இடம் பெற்று, பல்வேறு பள்ளி கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டு இனிதே நிறைவுற்றது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
