BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

உடுமலையில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு காவல் சார்பு ஆய்வாளர் (தாலுக்கா மற்றும் ஆயுதப்படை) ஆகிய பதவிகளுக்கான இலவச பயிற்சி முகாம்.

உடுமலை முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்கம் சார்பில் நேதாஜி மைதானத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு காவல் சார்பு ஆய்வாளர் தாலுக்கா மற்றும் ஆயுதப்படை ஆண் பெண் மற்றும் திருநங்கைகள் பதவிகளுக்கான நேரடித் தேர்வு 2022 ம் ஆண்டிற்கான இலவச பயிற்சி முகாம் துவங்கியது. வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும்
முகாமை உடுமலை முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்க தலைவர் டி.ராமலிங்கம் துவக்கி வைத்தார். தமிழ்நாடு போலீஸ் & ராணுவ பயிற்சி ஒருங்கிணைப்பாளர் முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்க செயலாளர்
சி.சக்தி வரவேற்றார். முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்க உப தலைவர் கோவிந்தராஜுலு நாயப்சுபேதார் நடராஜ் லியாகத் அலி கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இம்முகாமில் உடல்தகுதி தேர்வு உடல்திறன் போட்டி குறித்து மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது தொடர்ந்து துவக்க நாளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டது. இப்பயிற்சியானது ஞாயிற்று கிழமைகளில் காலை 6 மணி முதல் 7 மணி வரை நடைபெறுகிறது. ஆர்வமுள்ள மாணவர்கள் முன்னாள் ராணுவ வீரர் நலச் சங்க அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் மேலும் 7667559900/995263677 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு பயிற்சிக்கான முன்பதிவுகளை தெரிவிக்கலாம்.
முகாமிற்கான ஏற்பாடுகளை ஏற்பாடுகளை உடுமலை முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்கம் உடுமலை ரத்த பரிசோதனை நிலையம் & எக்ஸ் ரே உடுமலை பிரியா நர்சிங் பாரா மெடிக்கல் கல்லூரி இணைந்து செய்து வருகின்றனர்.இதன் எழுத்து தேர்வுகள் உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள கிளை நூலகம் எண் இரண்டில் நடைபெறும். முடிவில் பொருளாளர் சிவகுமார் நன்றி கூறினார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )