BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

அம்மாபேட்டை ஒன்றியம் வடபாதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகை கடன் பெற்று தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயிகளை அலைக்கழிப்பதை தமிழ்நாடு விவசாய சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம் 9346 வடபாதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தற்போது நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளை உறுதிமொழிப் படிவம் வெளியில் வாங்கி வரவேண்டும் என்று கூறிதொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் செயலாளர் அலைக்கழித்து வருகிறார் இதனால் பயனாளிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் தனியார் கடைகளில் படிவத்தை பெற்று வரவேண்டும் என்று நிர்பந்தம் படுத்துவதோடு பயனாளிகள் எழுதி கொடுப்பதையும் தவறு என்று திருப்பி அனுப்பும் அவலம் நீடித்து வருகிறது சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் உரிய விசாரணை நடத்தி தகுதியான பயனாளிகளுக்கு உடனடியாக தள்ளுபடியான நகைகளை வழங்கவும் வெளியில் பணம் கொடுத்து படிவம் வாங்கி வரச் சொல்லும் நிலையை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது உடனடியாக தஞ்சை மாவட்டம் நிர்வாகம் தலையிட்டு அலைக்கழிப்பு செய்யாமல் பொதுமக்களுக்கு தள்ளுபடியான நகையை வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )