BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

தீப்பெட்டி பண்டல்கள் விலை உயர்வை வியாபாரிகள் ஏற்காததால் ஏப்.6-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை உற்பத்தி நிறுத்தம். கோவில்பட்டியில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடல் தொழிலாளர்கள் வேலை இழப்பு.

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, எட்டயபுரம், கழுகுமலை மற்றும் விருதுநகர், சாத்தூர், சிவகாசி, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், திருவேங்கடம், வேலூர் மாவட்டம் குடியாத்தம், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் பிரதான தொழிலாளாக இருப்பது தீப்பெட்டி உற்பத்தி.

தமிழகம் முழுவதும் 50 முழு இயந்திர தீப்பெட்டி ஆலைகள், 300 பகுதி நேர இயந்திர தீப்பெட்டி ஆலைகள் மற்றும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீப்பெட்டி பேக்கிங் சார்பு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. தீப்பெட்டி தொழிலை நம்பி நேரிடையாக மற்றும் மறைமுகமாக சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழில் 90சதவீதம் பெண்கள் தான் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான முக்கிய மூலப்பொருள்களான பாஸ்பரஸ், குளோரைட், மெழுகு, அட்டை, பேப்பர் என அனைத்து பொருள்களின் விலை அதிகரித்த காரணத்தினால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் ரூ 1க்கு விற்பனை செய்யப்பட்ட தீப்பெட்டியின் விலையை ரூ 2ஆக உயர்த்தினர்.

இந்நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு எதிரொலியாக கடந்த 3 மாதங்களில் மீண்டும் தீப்பெட்டி உற்பத்தி மூலப்பொருள்களின் விலை 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மேலும் நெருக்கடியை சந்திக்க தொடங்கியுள்ளனர்.
மூலப்பொருள்களின் விலை உயர்வினை சமாளிக்கும் வகையில் தீப்பெட்டி பண்டல்களின் விலையை உயர்த்த தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் முடிவு செய்தனர்.

600 தீப்பெட்டிகள் கொண்ட ஒரு பண்டலுக்கு தற்பொழுது 300 ரூபாய் என விற்பனை செய்து வரும் நிலையில் ஏப்ரல் 1ந்தேதி முதல் மொத்த வியாபாரிகளுக்கு ரூ 350க்கு விற்பனை செய்ய முடிவு செய்தனர்.

ஆனால் தீப்பெட்டியை கொள்முதல் செய்யும் வியாபாரிகள் விலை உயர்வை ஏற்கவில்லை. இதையடுத்து, வேறு தவிர்க்க முடியாத காரணங்களால் ஏப்.6-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை அனைத்து வகையான தீப்பெட்டி தயாரிப்பு நிறுவனங்களும், ஏற்றுமதி நிறுவனங்களும் விடுப்பு அளிப்பது என தெரிவித்தனர். அதன்படி இன்று அனைத்து தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளது தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )