BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

உடுமலை 100 ஆண்டு பழமை வாய்ந்த ஸ்ரீமாரியம்மனுக்கு நோன்பு சாட்டல் வரும் 21ல் தேரோட்டம்.

திருப்பூர் மாவட்டம்உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்கு, கோவில் வளாகத்தில், நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.உடுமலை நகரில், பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும், அம்மனுக்கு நடத்தப்படும் தேர்த்திருவிழா பிரசித்தி பெற்றதாகும்.பெருந்தொற்று பரவல் காரணமாக, இரண்டு ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை.இரண்டாண்டு இடைவெளிக்குப்பிறகு, இந்தாண்டு தேர்த்திருவிழா நடத்த திட்டமிடப்பட்டது.

அதன்படி, திருவிழாவை முறைப்படி அறிவிக்கும், நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சி நேற்று கோவில் வளாகத்தில் நடந்தது.
மாலை, 4:00 மணிக்கு பல்வேறு வகையான பூக்கள் கொண்டு, அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு, அனுமதி கேட்கப்பட்டது.

 

 

தொடர்ந்து, திருவிழா நிகழ்வு குறித்து முறைப்படி, அறிவித்து, 6:00 மணிக்கு, நோன்பு சாட்டப்பட்டது.நிகழ்ச்சியில், கோவில் பரம்பரை அறங்காவலர் ஸ்ரீதர், செயல் அலுவலர் சீனிவாசன் யூ கே பி முத்துசாமி குமார் யுகேபி கார்த்தி யு எஸ் எஸ் சஞ்சீவி சுந்தரம் ஏ கனகராஜ்விஆர்வி வேலுச்சாமி ஸ்வாட் ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாரம்பரிய முறைப்படி, வாத்தியங்களை இசைத்து, நோன்பு அறிவிப்புசெய்யப்பட்டது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )