மாவட்ட செய்திகள்
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் இலவச பயிற்சி வகுப்பு.

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் இலவச பயிற்சி வகுப்பு – நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், பயிற்சி மாணவர்கள் பங்கேற்றனர்.
நீதிபதிகள் தேர்வு மற்றும் APP மெயின் தேர்வுக்கான இலவச சிறப்பு பயிற்சி வகுப்பு பழைய மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக நடைபெறது.

சிறப்பு வகுப்பை 3வது சார்பு கூடுதல் நீதிபதி சோமசுந்தரம் துவங்கி வைத்தார். சிறப்பு வகுப்பினை முன்னாள் மாவட்ட நீதிபதி பூபாலன் நடத்தினார்.

இந்நிகழ்வில் வழக்கறிஞர் ஜேசுபால்ராஜ் கலந்து கொண்டனர். சிறப்பு வகுப்பினை குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் வழக்கறிஞர் வெங்கட் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இவ்வகுப்பில் திருச்சி, மதுரை, தஞ்சை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பயிற்சி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
