BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருச்சியின் மணல் மாட்டுவண்டி தொழிலாளர் சங்கத்தினர் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம்.

சிஐடியு மாவட்ட மணல் மாட்டுவண்டி தொழிலாளர் சங்கம், மலைக்கோட்டை வட்டார டயர் மணல் மாட்டுவண்டி சங்கம் மற்றும் விவசாயிகள் மணல் மாட்டுவண்டி சங்கம் சார்பில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மணல் மாட்டுவண்டி சங்க மாவட்ட தலைவர் ராமர் தலைமை கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


போராட்டத்தில் மாவட்டத்தில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் காலம் காலமாக மாட்டுவண்டியில் மணல் அள்ளும் முறையை மாற்றக்கூடாது. மாட்டுவண்டியில் மணல் அள்ள பர்மிட்டுக்கு ரூ224ஐ விட கூடுதல் தொகையை வசூலிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், மணல் தட்டுப்பாட்டை போக்க உடனடியாக மாட்டுவண்டி மணல் குவாரிகளை உடனே திறக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
போராட்ட உரையை சிஐடியு மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் வழங்கினார்.

இந்த போராட்டத்தில் மணல் மாட்டு வண்டி சங்க மாவட்ட செயலாளர் சேகர், நிர்வாகிகள் மாணிக்கம், குணா, மணிகண்டன், உறையூர் பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )