BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

சேலம் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் கூட்டு பண்ணை திட்டம் -2021-22 கீழ் தலா ரூபாய் 5 இலட்சம் மதிப்பிலான பண்ணை இயந்திரங்கள் உழவர் உற்பத்தியாளர் நல குழுவினருக்கு வழங்கப்பட்டது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம். அப்பமசமுத்திரம் மற்றும் கல்லாநத்தம் கிராமத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் கூட்டு பண்ணை திட்டம் -2021-22 கீழ் தலா ரூபாய் 5 இலட்சம் மதிப்பிலான பண்ணை இயந்திரங்கள் உழவர் உற்பத்தியாளர் நல குழுவினருக்கு வழங்கப்பட்டது.

இவ்விழாவில் ஆத்தூர் வட்டார ஆத்மா குழு தலைவர் டாக்டர்.வே. செழியன் அவர்கள் பண்ணை கருவிகளை விவசாயிகளுக்கு வழங்கினார். ஆத்தூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் திருமதி. V. ஞானபிரியா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அ. பத்மினி,பிரியதர்சினி,சி. சேகர் தோட்டக்கலை உதவி அலுவலர்கள் ரா. செல்வேந்திரன்,அ.கோபால் மற்றும் வேளாண் குழு உறுப்பினர்கள் விவசாய பெருமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )