மாவட்ட செய்திகள்
மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ அவரது பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்றோர் காப்பகத்தில் கேக்கு வெட்டி கொண்டாடினார்.

தேனி அருகே கோடாங்கிபட்டியில் மனிதநேய ஆதரவற்றோர் காப்பகம் செயல்பட்டு வருகிறது.
இந்த காப்பகத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக தலைமை கழக செயலாளர் துரை வைகோ அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு,இன்றுகாலை துரை வைகோ ஆதரவற்றோர் குழந்தைகள் மத்தியில் பிறந்தநாள் கேக்கை வெட்டி கொண்டாடினர்.
பின்னர் குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் போடி ஒன்றிய தலைவர் துரைக்கண்ணு இளைஞரணி செயலாளர் ரமேஷ் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ரமேஷ் கண்ணன் பார்த்தசாரதி மாவட்ட மகளிரணி செயலாளர் தமிழ்ச்செல்வி கமலக்கண்ணன் முன்னாள் மாணவரணி அமைப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச் சிக்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகி உப்புக்கோட்டை தாயகநேசன் தருண் சுருளி செய்திருந்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
