BREAKING NEWS

சினிமா

நடிகர் பிரபாஸுக்கு என்னாச்சு?

நடிகர் பிரபாஸுக்கு என்னாச்சு?

நடிகர் பிரபாஸுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் அவர் ஒரு மாதம் ஓய்வெடுக்கிறார்.

பிரபல தெலுங்கு ஹீரோ பிரபாஸ். ‘பாகுபலி’ படம் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் இவர். அதன் பிறகு இவர் நடிக்கும் படங்கள் பான் இந்தியா முறையில் உருவாகி வருகிறது. இவர் நடித்த ‘சாஹோ’, ‘ராதே ஷ்யாம்’ படங்கள் இந்தியா முழுவதும் வெளியானாலும் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

‘சாஹோ’ படப்பிடிப்பின் போது பிரபாஸுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. அறுவை சிகிச்சை செய்து கொள்ள அப்போது கூறப்பட்டது. ஆனால், அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்ததால் அறுவை சிகிச்சை செய்ய முடியவில்லை. இந்நிலையில், தற்போது வலி அதிகமானதால், மருத்துவர்கள் அறிவுரைப்படி ஐரோப்பிய நாடு ஒன்றில் நடிகர் பிரபாஸ் அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

இதனால் அவர் ஒரு மாதம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் அவர் வெளிநாட்டில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார்.

இதன் காரணமாக அவர் நடித்து வரும் ஆதிபுருஷ், சலார், நாக் அஸ்வின் இயக்கும் படங்களின் ஷூட்டிங் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மற்றும் மாருதி இயக்கும் புதிய படத்தின் தொடக்க விழா இந்த மாதம் நடக்க இருந்தது. அதுவும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )