சினிமா
ராம் பாலா இயக்கத்தில், `வந்தான் சுட்டான் ரிப்பிட்டு’

ராம் பாலா இயக்கும் படத்துக்கு ’வந்தான் சுட்டான் ரிப்பிட்டு’ என்று டைட்டில் வைத்துள்ளனர்.
சந்தானம் நடித்த ‘தில்லுக்கு துட்டு’, ’தில்லுக்குத் துட்டு 2’ படங்களை இயக்கியவர் ராம்பாலா. திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து மிர்ச்சி சிவா நடிப்பில் ‘இடியட்’ படத்தையும் இவர் இயக்கி இருந்தார். காமெடி கதையுடன் உருவான இந்தப்படங்கள் வரவேற்பைப் பெற்றன.
இதையடுத்து அவர் அடுத்து இயக்கும் படத்துக்கு ‘வந்தான் சுட்டான் ரிப்பிட்டு’ என்று டைட்டில் வைத்துள்ளனர். சமீபத்தில் வெளியான ’மாநாடு’ படத்தின் எஸ்.ஜே.சூர்யா பேசும் இந்த வசனம் பரபரப்பாக பேசப்பட்டது. அதையே படத்துக்கு தலைப்பாக வைத்துள்ளனர். 2 மூவி பஃப்ஸ் நிறுவனம் சார்பில் ரகுநாதன் பி.எஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
சந்திரமௌலி, மீனாக்ஷி கோவிந்தராஜன், ரெபா மோனிகா, மனோ பாலா, ஊர்வசி, லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

காமெடி கலந்த திகில் படமாக உருவாகும் இதன் படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கியது. படத்தில் சந்திரமௌலி நாயகனாக நடிக்கின்றார். மீனாக்ஷி கோவிந்தராஜன், ரெபா மோனிகா நாயகிகளாக நடிக்கின்றனர். மனோ பாலா, ஊர்வசி, லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
செவிலோ ராஜா ஒளிப்பதிவை செய்கிறார். சந்தோஷ் தயாநிதி மற்றும் கே.சி.பாலசாரங்கன் இசையமைக்கின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
