மாவட்ட செய்திகள்
ஒரத்தநாடு அருகே ஆட்டோ மோதி வாலிபர் பலி.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள திருநல்லூரை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 28). இவர் ஒரத்தநாட்டில் இருந்து மன்னார்குடி சாலையில் தனது பெரியப்பா கர்ணனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த ஆட்டோ எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பழனிச்சாமி சம்பவ இடத்திலேயே பலியானார். கர்ணன் பலத்த காயம் அடைந்து தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
