BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

வேடசந்தூர் -நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது தனியார் பால் வாகனம் மோதி விபத்து.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா விட்டல்நாயக்கன் பட்டி அருகே சேலத்தில் இருந்து கரூர் வழியாக திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து பயணிகளை ஏற்றுவதற்காக விட்டல் நாயக்கன் பட்டி நின்று கொண்டிருந்தது. அப்போது கிருஷ்ணகிரி அருகே சிக்கனா பள்ளியைச் சேர்ந்த குமார் (32 )என்பவர் தனியார் பால் வாகனத்தை ஓட்டிக்கொண்டு கிருஷ்ணகிரியில் இருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது பின்புறமாக தனியார் பால் வாகனம் மோதியதில் படிக்கட்டில் நின்று கொண்டிருந்த பெண் ஒருவர் கீழே விழுந்து சிறிய காயங்களுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மேலும் விபத்தை தடுக்கும் விதமாக சுதாரித்துக்கொண்ட குமார் சாலையின் வலது புறமாக வாகன ஸ்டேரிங்கை திருப்பி வேகமாக கட்டுப்பாட்டு சுவற்றின் மேல் மோதி நிறுத்தியதால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படாமல் பேருந்தில் இருக்கும் பயணிகளை பாதுகாக்கும் விதமாக செயல்பட்டார். இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )