மாவட்ட செய்திகள்
குஜிலியம் பாறை- ராதாபுரத்தில் உள்ள கோவிலில் மஹா கும்பாபிஷேகம்.

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டம் ராதாபுரம் கோயிலில் உள்ள தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த மூன்று தினங்களாக விக்னேஸ்வர பூஜை, புண்ணிய யாகம், கணபதி ஹோமம், பூர்ண குதி ,அக்னி ஜனனம் என யாக வேள்விகள் நடந்தது. நேற்று சூரிய பூஜை, மண்டல பூஜை ,ஜப ஹோமங்கள் ,சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் செல்வ விநாயகர், மாரியம்மன், காளியம்மன் முத்தாலம்மன், பகவதி அம்மன், பாலமுருகன், முனியப்பன், நவகிரகங்கள் என கோவிலுக்குள் உள்ள தெய்வங்களை பிரதிஷ்டை செய்து கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது.மேலும் இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து அன்னதானத்தை உண்டு சென்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
