BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

கொடைக்கானல் – சுற்றுலா பயணிகளுக்கு கூடுதல் கட்டணம் விதித்ததால் அனைத்து பொது மக்களும் எதிர்ப்பு.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா தளமாக விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் 10 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதில் கொடைக்கானல் பகுதியில் உள்ள பேரீஜம் ஏரி இயற்கையாகவே அமைந்து உள்ளதால் இங்கு படகு சவாரி செய்ய அனைவரும் விருப்பப் படுகின்றனர்.மேலும் அங்கு யானைகள், குரங்குகள், முயல்கள் ,மான்கள் என பலவிதமான விலங்குகள் அந்த ஏரியை சுற்றி வசித்து வருவதால் இன்னும் பயணிகள் பொழுதை போக்க ஏதுவாக அமைகிறது. இந்நிலையில் கொடைக்கானல் பேரிஜம் பகுதிக்கு வரும் வரும் சுற்றுலா பயணிகளுக்கு படகு சவாரி செய்வதற்கு நகராட்சி சார்பாக கூடுதலாக ரூபாய் 50 விதிக்க முடிவு செய்துள்ளனர்.

இதற்கு சுற்றுலா பயணிகள் மற்றும் அவ்வூரில் வசிக்கும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த கட்டண முடிவு கைவிடப்பட்டது. எனினும் வனத்துறை சார்பாக வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு 300முதல் 500வரை நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )