BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

வீட்டின் சுவற்றில் தொடர்ந்து சிறுநீர் கழித்து வந்ததை, தட்டி கேட்ட உணவக முதலாளி அடித்து கொலை. சக்கரை ஆலை காவலர் கைது.

தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள அண்டக்குடியை சேர்ந்தவர் அசோக்குமார் (49). மாற்று திறனாளியான இவருக்கு லதா என்ற மனைவியும் இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். லதா வாழ்க்கை கிராமத்தில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். அசோக்குமார் வீட்டின் அருகிலேயே டிபன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் தாராசுரத்தை சேர்ந்த அன்பழகன் (50) என்பவர் தங்கி திருமண்டங்குடியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் காவலராக பணியாற்றி வருகிறார்.

 


இந்நிலையில், அசோக்குமாரின் வீடு மற்றும் ஹோட்டல் அருகிலே அன்பழகன் தொடர்ந்து சிறுநீர் கழித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஹோட்டலுக்கு வருபவர்களுக்கும், வீட்டில் உள்ளவர்களுக்கும் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் இதுகுறித்து பலமுறை அன்பழகனை கண்டித்துள்ளார் அசோக்குமார். மேலும் மாதச் சம்பளம் வாங்கி பணம் தருவதாக கூறி உணவு சாப்பிட்டு வந்துள்ளார். இதனால் சாப்பிட்ட உணவிற்கும் அவர் பணம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மதியம் அதேபோல் சிறுநீர் கழித்துவிட்டு சாப்பிட கடைக்கு வந்த அன்பழகனுக்கும், அசோக்குமாருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அன்பழகன் அருகில் கிடந்த கடப்பாறையை எடுத்து அசோக்குமாரின் தலையில் அடித்ததில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தகவலறிந்த கபிஸ்தலம் போலீசார், அசோக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அன்பழகனை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )