மாவட்ட செய்திகள்
எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் இரண்டு ஆண்டுகளாக அகற்றப்படாத குப்பைகள்.

எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் இரண்டு ஆண்டுகளாக அகற்றப்படாத குப்பைகள்.. நோய் தொற்று ஏற்படும் அச்சத்தில் பொதுமக்கள்… குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து சேலம் செல்லும் வழியில் 200 மீட்டர் தொலைவில் சரப்பங்கா நதி அமைந்துள்ளது. இந்த நதியானது, கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் சீரமைக்கப்படாமல் இருந்த நிலையில், கடந்த ஆட்சிகாலத்தில் சீரமைக்கப்பட்டது. அதன்பிறகு 6 மாதங்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால், அதை சுற்றியுள்ள ஏரிகளில் நிரம்பி வெளியேற்றப்படும் உபரிநீரனது, சரப்பங்கா நதியின் வழியாக சென்று பள்ளிபாளையம் ஆற்றில் கலக்கும்.

இத்தனை தொடர்ந்து, சரப்பங்கா நதி சீறமைக்கும் போது நதியில் இருந்து எடுக்கப்பட்ட கழிவு குப்பைகளை ஒதுக்குபுறமாக கோட்டாமல் நதியின் அருகிலேயே கொட்டப்பட்டுள்ளது. இதனால், மிகுந்த துர்நாற்றம் விசுவாதாக அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர், இப்பாலம், வழியாக தினமும் ஆயிரக்கானக்கான பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

எனவே, இந்த அவள நிலையை தமிழக அரசு பார்வைக்கு கொண்டு சென்று குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
