BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தஞ்சை 34- வது வார்டு பகுதி மக்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் மேயர் சண். ராமநாதன் தொடங்கி வைத்தார்.

தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சை மாநகராட்சி 34 – வது வார்டு பகுதி மக்கள் பயனடையும் வகையில் இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று நடைபெற்றது.
தஞ்சை மாநகராட்சி சௌராஷ்டிரா தெரு நடுநிலைப் பள்ளியில் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இந்த இலவச கண் சிகிச்சை முகாமை மேயர் சண். ராமநாதன் தொடங்கி வைத்தார். அப்பகுதி மாநகராட்சி கவுன்சிலர் சுந்தர செந்தில், மாநகராட்சி மண்டல குழுத் தலைவர் ரம்யா சரவணன், 33 – வது வார்டு கவுன்சிலர் வனிதா செல்வகுமார், வார்டு செயலாளர் இளங்கோவன், முன்னாள் பிரதிநிதி பன்னீர், பள்ளி தலைமை ஆசிரியை வசுமதி, பழனி அசோகன், சக்கரவர்த்தி மற்றும் அப்பகுதி மக்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கண்புரை நோய், தூரப்பார்வை, கிட்டப்பார்வை, கண் மங்கலாக தெரிகிறது உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைகள் குறித்து பரிசோதனை செய்யப்பட்டு ஆலோசனை வழங்கப் பட்டன. முன்னதாக அப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் ஆரிஸ் ரிதன்யா, ஆரிஸ் ரூட்ஸ் பிரின்ஸி ஆகியோர் இரட்டைக் கம்பு சிலம்பம் சுலட்டி ஆடி அனைவரையும் வியக்க வைத்தனர். இவர்களை மேயர் சண்.ராமநாதன் பாராட்டி வாழ்த்தினார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )