BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தஞ்சையில் சுட்டெரிக்கும் வெயிலில் மக்களின் தாகம் தணிக்க அதிமுக சார்பாக கழக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தண்ணீர் பந்தல் திறந்துவைத்தார்.

தற்போது கோடை காலம் ஆரம்பிக்கும் சூழ்நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் மக்களின் வறட்சியை போக்கும் வகையிலும் தாகம் தணிக்கும் வகையில் தஞ்சை ரயில் நிலையத்தின் எதிரே தஞ்சை அதிமுக தெற்கு மாவட்டம் சார்பாக கழக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கோடைகால தண்ணீர் பந்தலை இன்று திறந்து வைத்தார்.

திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர் சாத்துக்குடி ஜூஸ் திராட்சை தர்பூசணி அன்னாசி பழம் வெள்ளரிக்காய் போன்றவைகளை பொதுமக்களுக்கு கொடுத்தார் இந்த கோடைகால தண்ணீர் பந்தல் கோடை காலம் முடியும் வரையில் தொடர்ந்து செயல்படும் .

இந்நிகழ்வில் மாவட்ட பால்வளத் தலைவர் காந்தி மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திருஞானம் ஒன்றிய செயலாளர் துரை வீரணன் கும்பகோணம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம ராமநாதன் கும்பகோணம் ஒன்றிய செயலாளர் வி என் ஆர் செந்தில்குமார் பகுதி கழக செயலாளர்கள் ரமேஷ் புண்ணியமூர்த்தி அறிவுடைநம்பி மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு திருச்சி மண்டல பொறுப்பாளர் வினோ பாலன் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )