BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

அதிமுக ஒன்றிய பெருந்தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றக் கோரி வட்டாட்சியர் முன்னணியில் நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு நடைபெற்றது.

அதிமுக ஒன்றிய பெருந்தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றக் கோரி வட்டாட்சியர் முன்னணியில் நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு நடைபெற்றது இதில் 15 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களின் 12 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளார்கள்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய 15-வார்டு உறுப்பினர்களில் கடந்த ஆட்சி காலத்தில் சாவித்திரி சுப்ரமணியம் என்பவர் ஒன்றிய பெருந்தலைவராக பதவி வகித்து வந்தார்கள்.

இதை தொடர்ந்து ஆட்சி மாற்றத்தின் காரணமாக அதிமுக ஒன்றிய பெருந்தலைவரை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நிறைவேற்றக் கோரி கடந்த மாதம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து பழனி கோட்டாட்சியர் சிவக்குமார் தலைமையில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது என்று இதில் அதிமுக கவுன்சிலர்கள் 7 பேர் உள்பட 12 வார்டு கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளார்கள்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )