மாவட்ட செய்திகள்
மகளிர் குழு மாஃபியாக்களால் பாதிக்கப்படும் குடும்பப்பெண்கள்!

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தனியார் நிதி நிறுவனங்கள் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தனிநபர் கடன் பெண்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுக்கின்றோம் என்ற பெயரில் அனைத்து குடும்ப பெண்களுக்கும் கடனைக் கொடுத்து வருகிறது. அதனை முறையற்ற விதத்தில் அவர்களிடமிருந்து ஒவ்வொரு கிழமைகளில் வாரம் முழுவதும் அவர்கள் கொடுக்கும் பணத்திற்கு அதிக வட்டி போட்டு அடாவடியாக வசூல் செய்கிறார்கள் .இப்படிப்பட்ட நிகழ்வுதான் ஈரோட்டில் உள்ள பழைய பாளையத்தில் வசிக்கும் ஒரு பயனாளிக்கு ஏற்பட்ட அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் .இவர் ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் சாலையில் பழைய பாளையத்தில்( கோமதி பெயர் மாற்றப்பட்டுள்ளது) குடியிருந்து வருகிறார் .இவர் மகளிர் சுய உதவிக்குழு மூலமாக ஆசிர்வாதம் என்ற மைக்ரோ பைனான்ஸில் கடன் பெற்றுள்ளார் .கடன் தொகையை மாதம் தவறாமல் கட்டி வந்த நிலையில் இவரது கணவருக்கு கடந்த 4ஆம் தேதி 2வது மாதம் திடீரென்று ஹார்ட் அட்டாக் வந்து அறுவை சிகிச்சை செய்து ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார். அப்போது அடாவடி மைக்ரோ பைனான்ஸ் ஆசீர்வாதம் குழுவை சார்ந்த கலெக்ஷன் மேனேஜர் ஒருவர் இவருக்கு தொலைபேசி மூலமாக தொடர்புகொண்டு இரண்டாவது மாத தவணையை செலுத்துமாறு கேட்டுள்ளார். அதற்கு கோமதி தனது கணவருக்கு அறுவை சிகிச்சை செய்து மருத்துவமனையில் இருக்கிறோம் .ஆகையால் என்னால் இப்பொழுது பணம் செலுத்த முடியாது. இன்னும் ஒரு வாரம் அவகாசம் கொடுங்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு அடாவடி மைக்ரோ பைனான்ஸ் கலெக்ஷன் மேனேஜர் உன் கணவர் இருந்தாலென்ன இறந்தால் என்ன எங்களுக்கு வேண்டியது பணம், நீ எந்த மருத்துவமனையில் இருக்கிறாய் நான் நேரடியாக வந்து வசூல் செய்கிறேன் என்று கூறி மருத்துவமனை விலாசத்தை கேட்டுள்ளார். அதற்கு கோமதியும் நீங்கள் இங்கு வர வேண்டாம் மருத்துவர் எல்லாம் வருவார்கள் போவார்கள். ஆகவே இன்னும் ஒரு வாரம் எனக்கு அவகாசம் கொடுங்கள் என்று கெஞ்சியும் அடாவடி வசூல் மேனேஜர் அதெல்லாம் எனக்கு தெரியாது நான் நேரில் வருகிறேன் பணத்தை கொடு இல்லையேல் நீ பணம் கொடுக்கும் வரை மருத்துவமனையிலேயே நான் உட்கார்ந்து இருக்கிறேன் என்று கூறியுள்ளார். வேறு வழி தெரியாத கோமதியும் ஆசிர்வாதம் குழுவைச் சார்ந்த கலெக்ஷன் மேனேஜரை மருத்துவமனைக்கு வர வைத்து மருத்துவச் செலவுக்காக வைத்திருந்த தொகையை செலுத்தியுள்ளார். அந்த மேனேஜர் அப்போதும் ஆத்திரம் தீராமல் கோமதியின் கணவரையும், கோமதியையும் மருத்துவமனையில் வைத்து தனது செல்போனில் படம் பிடித்துக் கொண்டு நானும் வசூல் செய்து விட்டேன் என்று ஆணவத்தில் சென்றுள்ளார் .இப்படி மனித உயிர்களைப் பற்றியும்,அவர்களது மரியாதையை பற்றியும் கவலைப்படாமல் வசூல் செய்யும் மகளிர் குழுக்கள் என்ற பெயரில் ஐடிஎப்சி ஆசிர்வாதம் கிராமிய கூட்ட கிராம விடியல் சூர்யா டை எம் எஸ் எம் எஸ் பேங்க் இன்னும் பல முக்கிய பங்கு வகிக்கின்றன. இவர்கள் அனைவரும் யார்? இவ்வளவு அதிகாரத்தை இவர்களுக்கு கொடுத்தது யார்?. இதுதான் மனித உரிமையா என்ற கேள்வி சமூக ஆர்வலர்களிடம் எழுகிறது. மேலும் இப்படி நடந்து கொள்ளும் குழுக்களைப் பற்றி அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் யாரும் புகார் தருவது இல்லையா அல்லது தெரிந்தும் அமைதி காத்து வருகிறார்களா?. அதிகாரிகள் மேலும் குடும்ப பெண்கள் , தனியாக வசிக்கும் பெண்கள், ஆதரவற்ற பெண்கள், வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பெண்கள் ஆகியோரை குறிவைத்து அவர்களுக்கு மைக்ரோ பைனான்ஸ் முறையில் பணம் கொடுத்து அவற்றை குறிப்பிட்ட தேதியில் வசூல் செய்ய பெண்களை கட்டாயப்படுத்தி வசூலிக்கிறார்கள். அவற்றில் சில பெண்கள் பணம் கட்ட இயலாத போது அவர்களை குறிவைத்து அவமானப்படுத்தி தவறான வழிக்கு அழைத்துக்கொண்டு செல்கின்றனர். மேலும் கிராமப்புறங்களில் வசிக்கும் எத்தனையோ மகளிர் இந்த மைக்ரோ பைனான்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனத்தின் மூலம் பாதிக்கப்பட்டு வெளியே சொல்ல முடியாமல் தவித்து கொண்டுள்ளார்கள். மேலும் நிதி நிறுவனங்கள் பணத்தை மகளிர் குழுக்களுக்கும், தனி பெண்களுக்கும் கொடுக்கும் போது பல கையொப்பங்களை அவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்கிறார்கள். படிக்கத் தெரியாத பாமர மக்களும், ஏழை-எளிய ஆதரவற்ற பெண்களும் மேற்படி கையொப்பமிட்டு பணம் வாங்கி இருப்பதால் அவர்களை அந்த ஆவணங்களை வைத்து மிரட்டி அவர்களை தங்களது வழிக்கு அழைத்துச் செல்வதாக பல புகார்கள் உள்ளது. மேலும் எண்ணற்ற மகளிர் பெற்ற கடனுக்கு தவணைத் தொகையை குறிப்பிட்ட நேரத்தில் செலுத்த வரும்போது வசூலிக்க வரும் மேற்படி தனியார் நிதிநிறுவனங்கள் அவர்கள் வீட்டிலேயே தங்கி அவர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு தான் செல்ல வேண்டும் என்ற கட்டாயத்தின் பேரில் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அங்கேயே தங்கி அந்த குடும்பத்திற்கு மிகப்பெரிய மன உளைச்சல் ஏற்படுத்துகிறார்கள். இதுகுறித்து பாரத ரிசர்வ் வங்கி பலமுறை கடன் வசூலிக்கும் முறையை முறையாக கையாள வேண்டும் மேற்படி சிறு கடன்கள் வசூலிக்கும் போது அவர்களுடைய குடும்ப நிலை மற்றும் அவர்களிடம் மிரட்டல், உருட்டல் இல்லாமல் கடனை வசூலிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த காலகட்டங்களில் பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் தனியார் நிதி நிறுவனங்கள் கிராமங்களில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அளிக்கப் பட்ட கடனையும் மற்றும் குடும்ப பெண்கள் போன்றவர்களுக்கு அளிக்கப் பட்ட கடனையும் தவணைத் தொகையை கட்டாயப்படுத்தி வசூலிக்கக் கூடாது என்று அறிவிப்பு அளித்துள்ளனர். ஆனாலும் இதனை மீறி அனைத்து தனியார் நிதி நிறுவனங்கள் மேற்படி சுய உதவிக்குழு பெண்களிடம் தவணைத் தொகையை கட்டாயப்படுத்தி வெற்றியுடன் வசூல் செய்கிறார்கள். மேலும் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றவர்கள் அந்த நிதி நிறுவன அலுவலர்களுக்கு பயந்து பலர் ஊரை விட்டு வெளியில் சென்று விட்டார்கள். பலபேர் மானத்திற்கு பயந்து தற்கொலை செய்து கொண்டார்கள் .பல பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் ரீதியான கொடுமைகளை வெளியில் சொன்னால் வெட்கம் என்று தங்கள் மனதிலேயே பூட்டி வைத்து கொண்டு தினம் தினம் செத்துக் கொண்டிருக்கிறார்கள் . தனியார் நிதி நிறுவனங்கள் கிராமப்புற, நகர்ப்புற மகளிருக்கு நிதி உதவி அளித்து அவர்களை வாழ்க்கை தரத்தையும் வாழ்வாதாரத்தையும் பெரிதாக உத்தரவாதம் அளித்து அதற்கு மாறாக நிதி உதவி அளித்து மேற்படி மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் சீர ளித்துள்ளனர் எனவே தற்போது பொறுப்பேற்றுள்ள நமது தமிழக மாண்புமிகு முதல்வர் அவர்கள் கிராமப்புற மகளிர் மற்றும் நகர்ப்புற மக்களின் வாழ்வாதாரத்தை கவனித்து கொண்டு அவர்களின் வாழ்க்கையை நாசமாக்கி கொண்டிருக்கும் தனியார் நிதி நிறுவனங்களை மீது முறையான நடவடிக்கை எடுத்து அவர்கள் மேற்படி மகளிரிடமிருந்து வசூல் செய்த பணத்தை பல்லாயிரம் கோடி சொத்துக்களை வாங்கி குவித்துள்ளது.இவற்றை அரசு கையகப்படுத்தி அரசுடைமையாக்கி கிராமப்புற மகளிர் மேம்பாட்டு திட்டங்களுக்கு தமிழக அரசு மகளிர் வங்கியை தொடங்கி முழுக்க முழுக்க பெரிய அதிகாரிகளாக நியமித்து அவர்கள் மூலமாக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நிதி உதவி அளித்து தனியார் நிதி நிறுவனத்திடம் இருந்து மகளிரை காப்பாற்றி கையகப்படுத்தும் நிதி மூலம் தமிழக அரசு வங்கியை தொடங்கி மகளிர்களுக்கு உதவி செய்யுமா தமிழக அரசு. தமிழகத்தில் நல்லாட்சி புரிந்து வரும் நமது முதல்வர் ஸ்டாலின் இதை கவனத்தில் கொண்டு கண்டிப்பாக தமிழக மகளிரையும் அவர்கள் குடும்பத்தாரையும் காப்பாற்றுவார் என்று நாமும் அந்த அபலைப் பெண்களும் நம்பிக்கை யுடன் காத்திருப்போம்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
