மாவட்ட செய்திகள்
மதுரை வந்தது கள்ளழகரின் குதிரை.

‘யானை வரும் பின்னே… மணியோசை வரும் முன்னே…’ என்பார்களே, அதைப் போல வைகையில் அழகர் எழுந்தருள்வதற்கான வாகனமான தங்கக்குதிரை அழகர்கோயிலில் இருந்து இன்று மதுரை வந்து சேர்ந்துள்ளது.
திருவிழாக்களின் நகரான மதுரையில் மீனாட்சியம்மன் கோயில் சித்திரைப் பெருந்திருவிழா கோலாகலமாக நடந்துகொண்டிருக்கிறது. இந்த விழாவினூடேயே, அழகர்கோயிலில் உள்ள கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவும் தற்போது தொடங்கியிருக்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு அங்குள்ள கல்யாண மண்டபத்தில் சுந்தரராஜபெருமாள் எழுந்தருள்கிறார்.
14-ம்தேதி (வியாழக்கிழமை) அழகர்கோயிலில் இருந்து கள்ளழகர் கோலம் பூண்டு தங்கப்பல்லக்கில் மதுரை நோக்கிப் புறப்படும் அழகர், மறுநாள் இரவில் தல்லாகுளம் பெருமாள் கோயிலில் தங்கக் குதிரையில் எழுந்தருள்வார்.
